உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இசட் வடிவ சுரங்கப்பாதை: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

இசட் வடிவ சுரங்கப்பாதை: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' வடிவ சுரங்கப் பாதையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.,13) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 'இசட்' வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் - லே இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், 2,700 கோடி ரூபாய் செலவில் 6.5 கி.மீ., நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள இசட் வடிவ சுரங்கப் பாதை, கடல் மட்டத்திலிருந்து 8,652 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vn2wwzoe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருவழிப் பாதையாக, தலா 10 மீ., அகலம் கொண்ட சிக் - சாக் வளைவுகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையில், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ., வேகத்தில், ஒரு மணி நேரத்திற்கு 1,000 வாகனங்கள் செல்ல முடியும். அவசர காலத்தில் உதவும் வகையில், இந்த சுரங்கப்பாதையின் அருகில் 10 மீ., அகலத்தில் மற்றொரு சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.ரயில்வே சுரங்கப்பாதையாகவும் இதை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இமயமலை புவியியலைக் கருத்தில் கொண்டு, நியூ ஆஸ்ட்ரியன் சுரங்க முறையில், இந்த இசட் வடிவ சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.சோனாமார்க் நகர மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ள இந்த சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.,13) நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் சுரங்கப் பாதை கட்டுமானத்துக்கு அயராது பணியாற்றிய தொழிலாளர்களை சந்தித்து, பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் அவர்களை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அசோகன்
ஜன 13, 2025 15:29

சினிமாவிலும் அசிங்கமான கவிதையிலும்தான் திமுக பாலங்களை கடியுள்ளது ???


N.Purushothaman
ஜன 13, 2025 14:18

வாழ்த்துக்கள் ....அவசர காலங்களில் ராணுவ டாங்கிகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் எடுத்த செல்ல முடியும் என்பதால் பாக்கி மற்றும் சீனாக்காரன் கடுப்புல இருக்கான்.. இந்த திட்டம் வட இந்தியா என்பதால் இது சாத்தியமாயிற்று. இது போன்ற திட்டம் தமிழகத்திற்கு வந்தால் ஆளும் கட்சியா இருக்குறப்போ கையெழுத்து போட்டுட்டு எதிர்கட்சியானவுடனே அந்த திட்டத்தை எதிர்ப்பானுங்க ...அது யாருன்னு கண்டுபுடிங்க ? ...


Mediagoons
ஜன 13, 2025 14:18

எந்த வாடில் இருந்தால் என்ன ? மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது


chandrakumar
ஜன 13, 2025 22:05

தேசத்தின் வளர்ச்சி புரியாத கோமாளிகளின் பிதற்றல் ஒரே முறை நேரில் பார்த்துவிட்டு பிறகு கருத்து தெரிவிக்கலாம்....


Raj
ஜன 13, 2025 13:52

16 கோடியில் கட்டின பாலம் தண்ணீரில் போயிற்று. மீண்டும் பாலம் கட்ட 32 கோடி செலவில் கட்டப்படம்


தியாகு
ஜன 13, 2025 13:24

மோடிஜி திறந்து வைத்த சுரங்க பாதையை பாருங்கள், தேசிய கொடி மட்டும் வைத்து எவ்வளவு தூய்மையாக இருக்கிறது. இதுவே கட்டுமர திருட்டு திமுக திறந்து வைத்திருந்தால் கட்டுமர போட்டோ, சர்வாதிகாரி போட்டோ, அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணா போட்டோவுடன் மொத்த சுவற்றையும் நாறடித்திருப்பார்கள்.


M Ramachandran
ஜன 13, 2025 12:59

இதுமாதிரி பாதைகளையெல்லாம் இங்கு அனுமதிக்க மாட்டோம். ஏற்காதாவது திராவிட பாதை அமைத்தால் சினிமா உள்ள ஜால்ராக்களும் சத்தமா ஜால்றாவைய்ய தட்டுவோம்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 13:28

தமிழ் நாட்டுக்குத் தேவையான நிறைய மேம்பாலங்கள் கலைஞர் கட்டியிருக்கிறார், ஸ்டாலின் கட்டியிருக்கிறார். இவற்றை நீங்கள் திராவிட பாதைகள் என்கிறீர்கள் என்றால் சந்தோஷம். "


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை