உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாபா சித்திக் மகனுக்கு கொலை மிரட்டல்: சேட்டை வாலிபருக்கு காப்பு; மஹா.,வில் தொடரும் மிரட்டல் சம்பவங்கள்!

பாபா சித்திக் மகனுக்கு கொலை மிரட்டல்: சேட்டை வாலிபருக்கு காப்பு; மஹா.,வில் தொடரும் மிரட்டல் சம்பவங்கள்!

மும்பை: பாபா சித்திக்யின் மகனும், சட்டசபை உறுப்பினருமான ஜீஷன் சித்சிக் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. நொய்டாவை சேர்ந்த, குர்பான் என்ற 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12ம் தேதி 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாபா சித்திக் மகன் ஜீஷன், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் தம்மை இணைத்துக் கொண்டு உள்ளார். இந்நிலையில்,பாபா சித்திக்யின் மகனும், சட்டசபை உறுப்பினருமான ஜீஷன் சித்சிக் கட்சி அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும் மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து மும்பை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, நொய்டாவை சேர்ந்த, குர்பான் என்ற 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹா.,வில் தொடர்ந்து அரசியல்வாதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை