உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் இடைத்தேர்தலில் பூஜ்ஜியம்; சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்!

பீஹார் இடைத்தேர்தலில் பூஜ்ஜியம்; சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்!

வாஷிங்டன்: 'எனது கட்சி 2025ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்' என தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை தெரிவித்தார்.பீஹார் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் 4 தொகுதியிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் பிஹாரி சமூகத்தினர் மத்தியில் பேசியதாவது: பீஹார் உண்மையில் தோல்வி அடைந்த மாநிலம். மாநில வளர்ச்சிக்கு மிகப்பெரிய முயற்சிகள் தேவை. எனது கட்சி 2025ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது கணிப்பு படி நாங்கள் வெற்றி பெறுவோம்.2030ம் ஆண்டிற்குள் பீஹாரை நடுத்தர வருமானம் கொண்ட மாநிலமாக மாற்றுவது ஒரு பெரிய சவாலாக இருக்கும். பீஹார் மாநிலத்தில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும். பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கு எனது கட்சி முன்னுரிமை அளிக்கும். இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனது கட்சி செய்த நல்ல விஷயங்கள் இறுதியில் பலனை தரும். தற்போதைய மதுவிலக்கு பயனற்றது. மதுவிலக்கு ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

rama adhavan
நவ 25, 2024 23:17

இவர் ஒரு அரசியல் அல்னாஸ்கர். கற்பனை கோட்டை காட்டுவார். முடிவில் இருப்பதையும் இழந்து லல்லு + காங்கிரஸ் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைத்து அரசியல் களத்தில் காணாமல் மங்கி மறைந்து விடுவார்.


Ramesh Sargam
நவ 25, 2024 20:35

நானும் இந்த ஆள் ஒரு பெரிய புத்திசாலி என்று முதலில் நினைத்தேன். இப்பொழுது புரிகிறது இவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று. இவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார், ஒரு தமிழ் படத்தில் வடிவேலுவை பார்த்து மற்றொரு நடிகர் சொல்லுவார்.


sankar
நவ 25, 2024 16:32

மதுவிலக்கு ரத்து என்கிற ஒரு பாயிண்ட் இவரது முகவரியை தெளிவாக சொல்கிறது - திராவிட வேஷம் வெளுத்துவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை