உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும் படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும், ஏடிஸ் வகை கொசு வாயிலாகவே ஜிகா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக, மஹாராஷ்டிராவில் இரண்டு கர்ப்பமான பெண்கள் உள்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v24zmvto&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும் படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புனேவில் கர்ப்பினி பெண்கள் உட்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிகா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவலி, மூட்டு வலி

மருத்துவமனைகள் அனைத்தையும் கண்காணித்து போதிய சிகிச்சை அளிக்க வேண்டும். கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி 7 நாட்களுக்கு நீடித்தால், மக்கள் டாக்டரை அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீரகோபால்
ஜூலை 03, 2024 16:58

மாநில அரசு சாத்பாக மத்யியாரசுக்கெச்சரிக்கை உடறேன். ரயில்நிலயம், விமான நிலையங்கள், பார்லிமெண்ட், மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஜிகா கொசு பரவாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி