உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிரியல் பூங்கா பார்வையாளர் அதிகரிப்பு

உயிரியல் பூங்கா பார்வையாளர் அதிகரிப்பு

புதுடில்லி:புத்தாண்டு தினத்தன்று டில்லி உயிரியல் பூங்காவுக்கு 25,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 39 சதவீதம் அதிகம்.டில்லி உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் தேசிய விலங்கியல் பூங்கா, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 176 ஏக்கர் பரப்பளவு கொண்ட இது, 1952ல் நிறுவப்பட்டது. உயிரியல் பூங்கா அதிகாரிகள் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, புதனன்று மிருகக்காட்சி சாலையை பார்வையிட 25,343 பார்வையாளர்கள் வந்தனர். கடந்த ஆண்டில் 18,221 பேர் வந்திருந்தனர். இது 39.09 சதவீதம் அதிகம்.இதேபோல், 2023 ஜனவரி 1ல், 24,161 பேர் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை