உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.ஐ.டி.,யின் புதிய மையங்கள்

இது குறித்த முயற்சிகள் பல நாட்களாக இருந்து வந்த போதிலும், இக் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசுக்கும் தொழிலரங்குக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. தற்போது இவை முழுவதுமாக விவாதிக்கப்பட்டு தகுந்த கருத்துப் பரிமாற்றத்தின் பின் புதிய மையங்களைத் துவங்குவதற்கானஅனுமதி தரப்பட்டுள்ளது. ஐ.ஐ.ஐ.டி.,யின் செயல்பாடுகள் எப்போதும் ஆய்வுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஐ.ஐ.ஐ.டி.,க்களை துவங்குவதற்கான இறுதி வடிவத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. இக் கல்வி நிறுவனம் அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்புடன் செயல்படும் என்று தெரிகிறது. இதற்கான ஒப்புதலை பார்லிமென்டில் மத்திய அமைச்சரவை விரைவில் தரவுள்ளது. ஐ.ஐ.ஐ.டி.,யின் உருவாக்கம் மற்றும் செயல்பாடு குறித்த விரிவான அறிக்கையை இந்தியாவின் பிரசித்தி பெற்ற நாஸ்காம் அமைப்பு தயாரித்துக் கொடுத்தது. பின்பு இந்த வடிவானது இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் குழுக்களோடு விவாதிக்கப் பட்டது. ஐ.ஐ.ஐ.டி.,க்களை தணிக்கை செய்வது கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் மூலமாக நடத்தப்படும். இது தான் இன்னமும் சர்ச்சைக்குரிய அம்சமாக இருந்து வருகிறது.இதே போல வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் போதுமான தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தால் இப்பகுதிகளில் ஐ.ஐ.ஐ.டி.,க்களை துவங்குவதற்கு தனியார் துறையிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !