உள்ளூர் செய்திகள்

தகவல் பூங்காவாக மாறும் இந்தியா

இதில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் விரைவில் இந்தியா உலகின் தகவல் பூங்காவாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அரசு இக் கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக உயர்கல்வித் துறையில் புதிதாக பல கல்வி நிறுவனங்கள் துவக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா அறிவுமட்டத்தில் உலகில் முக்கிய சக்தியாக மாற ஒவ்வொரு துறையும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவைப் பெற தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சிக்கு வித்திடும் வகையில் மத்திய அரசு புதிதாக 8 ஐ.ஐ.டி.,க்கள், 30 மத்திய பல்கலைக்கழகங்கள், 10 தேசிய தொழில் நுட்ப நிறுவனங்கள், 20 ஐ.ஐ.ஐ.டி.க்கள், 5 ஐ.ஐ.எஸ்சி.,க்கள், 2 ஆர்க்கிடெக்சர் கல்வி நிறுவனங்கள், 373 கல்லூரிகள் மற்றும் ஆயிரம் பாலிடெக்னிக்குகளைத் துவங்குவதற்கான அனுமதியை கடந்தசில மாதங்களில் தந்திருக்கிறது. ஐ.ஐ.டி.க்கள் அதிக அளவில் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதன் மூலமாகவே பலம் பெறும் என்பதால் சமூகத்தின் கீழ் மட்டத்திலுள்ள நலிவடைந்த பிரிவினருக்கு கல்வி கற்க ஏதுவாகும் வகையில் பல்வேறு உதவித் தொகைகளை மத்திய அரசு தந்துவருகிறது. இந்தியாவிலுள்ள ஐ.ஐ.டி., க்கள் மூலமாகப் பட்டம் பெற்று அறிவியல், வியாபாரம், திட்டங்கள் தீட்டும் குழுக்கள் ஆகிய தலையாயப் பணிகளில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பட்டதாரிகள் ஈடுபட்டிருப்பதால் சமீப காலத்தில் இதில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில் தேசிய மேம்பாடும் தேசிய பாதுகாப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் அறிவு வளர்ச்சி இந்தியாவை வளரும் நாடுகளுக்கு இணையான தளத்தில் வைத்திருக்கிறது என்றும் பலர் கருத்துத் தெரிவித்தனர். தொழில் நுட்பத்தை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்வதன் மூலமாக இந்தியாவை அறிவுப் பூங்காவாக உருவாக்கும் முயற்சிகள் சமீப காலத்தில் வேகம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !