உள்ளூர் செய்திகள்

சாப்ட்வேர் டெஸ்டிங்- துறை அறிமுகம்

உற்பத்தித் துறை, சேவைத் துறை என எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர் மயமாகி வருவதை காண்கிறோம். கம்ப்யூட்டர்களை இயக்கிடத் தேவையான பல்வேறு புரொகிராம்களின் தொகுப்பு தான் சாப்ட்வேர் எனப்படுகிறது. தேவைக்கேற்ப உருவாக்கப்படும் சாப்ட்வேர்களை முறையான கட்டுக்கோப்பான மற்றும் வளர்ச்சிக்கான எண்ணிக்கையின் அடிப்படையிலும் பொறியியல் தத்துவங்களுடனும் அணுகுவதை சாப்ட்வேர் இன்ஜினியரிங் என அழைக்கின்றனர். தொழில் நுட்பத்தையும் வளர்ச்சியையும் அனைவரும் எட்டுவதில் இன்று சாப்ட்வேர் முக்கியப் பங்காற்றுகிறது.   டூம் போன்ற நவீன சாப்ட்வேர் முதல் நோய்களைக் கண்டறியும் சாப்ட்வேர் என சாப்ட்வேர் உருவாக்கப்படாத துறையே இல்லை. குறிப்பிட்ட பணியைச் செய்ய உதவும் புரொகிராம்களின் தொகுப்பான சாப்ட்வேரை அதன் நவீன மயம் மற்றும் கடினமான பணிகளைச் செய்ய உதவும் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்துகின்றனர். கம்ப்யூட்டர் செயல்படும் விதத்தைக் கட்டுப்படுத்தும் சாப்ட்வேரை சிஸ்டம் சாப்ட்வேர் என்று கூறுகின்றனர். இதை சாப்ட்வேர் தயாரிப்பாளர்களும் ஆய்வகங்களும் உருவாக்குகின்றன. ஒரு நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளுக்குத் தேவையான பிரத்யேகமான மற்றும் உபயோகிக்க எளிதான புரொகிராம்களின் தொகுப்பை அப்ளிகேஷன் சாப்ட்வேர் என அழைக்கின்றனர். உபயோகிப்பாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப சாப்ட்வேரில் அவ்வப்போது மாற்றங்களைச்செய்து மேம்படுத்துவதை சாப்ட்வேர் டெவலப்மென்ட் என அழைக்கின்றனர். இது ஒரு தொடர் செயல்பாடாகவே அமைகிறது. ஐ.டி., துறையில் பயிற்சியளிப்பது, வாடிக்கையாளரின் இடத்திலேயே ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவது, சாப்ட்வேர் பொருட்களை விற்பது, சாப்ட்வேர் சேவை செய்வது என பல பணிகளும் இத் துறையில் அடங்கியுள்ளன. இதில் ஒன்று தான் சாப்ட்வேர் டெஸ்டிங். நாட்டின் பல கல்லுõரிகளிலும் ஒவ்வொரு ஆண்டிலும் லட்சக்கணக்கில் சாப்ட்வேர் படிப்புகளை முடித்துவிட்டு இளைஞர்கள் வெளிவருகின்றனர். இதே நேரம் ஐ.டி., துறையும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இதனால் சாப்ட்வேர்களின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்திடும் மற்றும் சோதனை செய்திடும் முயற்சிகள் எப்போதுமே தேவைப்படுகின்றன. சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்த சோதனைகளே இத் துறையின் அடிப்படையாக உள்ளன. உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் ஒன்று அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்பதை இது சோதிக்கிறது. குறிப்பிட்ட சாப்ட்வேர் ஒன்றில் உள்ள குறைகளை அடையாளம் காண்பதுடன் அதன் உற்பத்திக்கு முன்பே அதன் உபயோகத்தில் உள்ள எதிர்மறை விளைவுகளையும் அளவிட வேண்டியுள்ளது. இதற்காக இத் துறை வல்லுனர்கள் வாடிக்கையாளர்களுடனும் சாப்ட்வேர் வளர்ச்சிக் குழுவுடனும் தகவல்பரிமாறிக் கொண்டு புரொகிராமின் பிரச்னைகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.   இத் துறையில் டெஸ்டிங், பெர்பார்மன்ஸ் டெஸ்டிங், செக்யூரிடி டெஸ்டிங் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இத் துறையில் ஒருவர் சிறப்பாக செயல்பட தொழில்நுட்பம், வணிகம் மற்றும் நிர்வாகத் திறன்களை ஒருங்கே ஒருவர் பெற்றிருக்க வேண்டும். இத் துறையில் ஈடுபட விரும்புபவர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருப்பதோடு வியாபாரம் மற்றும் தொழில் நுட்பம் குறித்த அடிப்படை அறிவு கொண்டவராக இருக்க வேண்டும். சோதனைக்குரிய சாப்ட்வேர் கருவிகளைப் பற்றிய அறிவு பெற்றிருந்தால் அது கூடுதல் நன்மை தரும். குறிப்பாக கம்ப்யூட்டர் தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முன்பெல்லாம் முழுமையான சோதனைகளை புரடக்ஷன் நிலையிலேயே முடித்து சாப்ட்வேரை லோட் செய்து வந்தனர். இதனால் உற்பத்திக்கான கட்டணம் அதிகமாகச் செலவானது. தற்போது சாப்ட்வேர் டெஸ்டிங் முறையே பின்பற்றப்படுவதால் இத் துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சாப்ட்வேர் டெஸ்டிங் துறையில் இணைந்திட விரும்புபவர் எச்சரிக்கையுணர்வு, ஆர்வம், எளிதாக முடிவெடுக்கும் திறன், தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றைப் பெற்றிருக்க வேண்டும். சாப்ட்வேர் டெவலப்பர் பணிகளைப் போன்றே இத் துறையினருக்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. டெஸ்ட் இன்ஜினியராகப் பணியைத் துவங்கி, டெஸ்ட் லீட், டெஸ்ட் மேனேஜர் என படிப்படியாக பணி முன்னேற்றம் பெறலாம். இதே போல டெஸ்டிங் குறித்த சிறப்புப்பிரிவுகளில் தனித்துவம் பெற்று சிறப்புப் பெறலாம். டெஸ்டிங் துறையில் இன்ஜினியரிங், அறிவியல், நிர்வாகவியல்,வணிகம் முடித்திருக்கும் பட்டதாரிகளே அதிகமாகப் பணியாற்றுகின்றனர். டெஸ்டிங் துறைக்கு கடந்த சில ஆண்டுகளாக மிக நல்ல வாய்ப்புகள் பெருகியிருந்த போதிலும் இத் துறைக்கான பிரத்யேகமான நீண்ட காலப் படிப்புகள் இல்லை. குறுகிய காலப் படிப்புகளே உள்ளன. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், எஸ்.டி.சி., டெக்னாலஜிஸ் போன்றவை இத் துறையில் சிறப்புப் படிப்புகளை தருகின்றன. இத் துறையில் ஈணிட்ச்டிண உதுணீஞுணூt எனப்படும் சோதனை நிபுணர்களுக்குக் கடுமையான தேவையுள்ளது. வங்கிகளில் உபயோகிக்கப்படும் சாப்ட்வேர்களை பரிசோதிக்கும் Banking Domain Expert களுக்கான தேவை தற்போது கடுமையாக உள்ளது. சாப்ட்வேர் டெஸ்டிங் நிபுணர்களுக்கு தற்சமயம் நல்ல வாய்ப்புகளும் தேவைகளும் இருப்பதால் அவர்களுக்கு ஆரம்பத்திலேயே மிக நல்ல ஊதியம் பெறும் வாய்ப்புகள் உள்ளன. இத் துறையின் நிபுணர்களுக்கு ஐ.டி., துறை வல்லுனர்களுக்கு ஈடான சம்பளம் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்