பி.இ., பிடெக்., எம்.டெக்., படிக்கலாம்!
தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக்., மற்றும் எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆன்லைன் வாயிலாக நடத்துகிறது.கல்வி நிறுவனங்கள்:தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்கள் ஆகியவை 'தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - டி.என்.இ.ஏ.,' வாயிலாக நிரப்பப்படுகின்றன.மேலும், மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம் - காரைக்குடி, மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம் - சென்னை மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி - சேலம் ஆகிய மத்திய அரசு கல்வி நிறுவனங்களால் ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்களும் டி.என்.இ.ஏ., கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன.படிப்புகள்:பி.இ., / பி.டெக்., - 4 ஆண்டுகள்பி.இ., (சாண்ட்விச்) - 5 ஆண்டுகள்எம்.டெக்., -கம்ப்யூட்டர் சயினஸ் அண்டு இன்ஜினியரிங் - 5 ஆண்டுகள்கல்வித் தகுதி:12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில தொழில்பிரிவு மாணவர்களும் குறிப்பிட்ட பொறியல் படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.தேவைப்படும் சான்றிதழ்கள்:10ம் மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது அதற்கு இணையான கல்வி சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் எண், எமிஸ் எண் மற்றும் தேவைக்கு ஏற்ப இதர சிறப்பு சான்றிதழ்கள்.விண்ணப்பிக்கும் முறை:www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் அல்லது டி.எப்.சி., மையங்களுக்கு நேரடியாக சென்று அலுவலர்களின் உதவியுடனும் விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு: கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 'கட்-ஆப்' கணக்கிடப்பட்டு, 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ரேங்க் அடிப்படையில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வு செய்ய வேண்டும்.விபரங்களுக்கு: இணையதளம்: www.tneaonline.orgதொலைபேசி: 1800 425 0110இ-மெயில்: tneacare@gmail.com