உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு கல்வி - கல்வி நிறுவனம், படிப்பு, செலவின விபரங்கள்

உயர்கல்வியை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள், எந்த நாட்டில் எவ்வளவு செலவாகும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அப்போதுதான், தனது நிதி நிலைக்கு சிக்கல் வராதவாறு, வெற்றிகரமாக வெளிநாட்டுக் கல்வியை முடித்து திரும்ப முடியும். சில ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில், இந்திய மாணவர்கள் உயர்கல்வியை மேற்கொள்ள எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றி இக்கட்டுரை அலசுகிறது. மேலும், அந்தந்த நாடுகளில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் வழங்கப்படும் படிப்புகள் குறித்தும் விபரங்கள் தரப்படுகின்றன. சீனா MEA அறிக்கையின்படி, 2013ம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 9,200 இந்திய மாணவர்கள் சீனாவில் படித்துக் கொண்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டை ஒப்பிடுகையில், இது 15% அதிகம். சீனாவில், ஆங்கில மொழி சிக்கல் குறிப்பிடத்தக்க அளவில் நீங்கிவரும் நிலையில், அங்கு படிக்கச் செல்லும் இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரபலமான படிப்புகள் மருத்துவப் படிப்பை பொறுத்தவரை, சர்வதேச மாணவர்களை, குறிப்பாக இந்திய மாணவர்களை ஈர்க்கும் ஒரு நாடாக சீனா விளங்குகிறது. ஏனெனில், இந்தியாவில் பல தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் MBBS படிப்பதற்கு ஆகும் செலவைவிட, சீனாவில் படிக்க ஆகும் குறைந்த செலவே இதற்கு காரணம். மேலும், பொறியியல் மற்றும் வணிகப் படிப்புகளும் வெளிநாட்டு மாணவர்களால் விரும்பப்படுகின்றன. பிரபல பல்கலைகள் Peking UniversityTsinghua UniversityFudan UniversityLiaoning Medical University செலவின விபரங்கள் கல்விக் கட்டணம் மேற்கொள்ளும் படிப்பு மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றைப் பொறுத்து, ரூ.1,27,800 முதல் ரூ.2,55,700 முதல் செலவாகிறது. மாதாந்திர செலவு நாம் தங்கும் நகரத்தைப் பொறுத்து, ரூ.12,000 முதல் ரூ.30,000 வரை செலவாகும். ஆலோசனை சீனாவில், இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளில் சேரும் இந்திய மாணவர்களுக்காக, Huawei Maitree என்ற பெயரில் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஹாங்காங் இது சீனாவின் சிறப்பு நிர்வாக அந்தஸ்து பெற்ற பகுதிகளில் ஒன்று. வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில், ஆசியாவின் முக்கிய கல்வி கேந்திரமாக ஹாங்காங் கருதப்படுகிறது. தரமான கல்வி, உயர்தரமான வாழ்க்கைத் தரம் மற்றும் பெருகிவரும் பணி வாய்ப்புகள் போன்றவை, வெளிநாட்டு மாணவர்களை, இப்பகுதியை நோக்கி ஈர்க்கும் பிரதான அம்சங்களாக உள்ளன. பிரபலமான படிப்புகள் சமீபத்தில்தான், இங்கே வழங்கப்படும் இளநிலைப் படிப்புகள், 3 வருடங்கள் என்ற நிலையிலிருந்து, 4 வருடங்கள் என்ற நடைமுறைக்கு மாற்றப்பட்டன. மேலாண்மை படிப்புகள், சமூக அறிவியல் பாடங்கள் மற்றும் மானுடவியல் படிப்புகள் போன்றவை ஹாங்காங்கில் புகழ்பெற்றவை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஹாங்காங் பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங் பல்லைக்கழகம் ஆகியவை, உலகளவில் சிறந்த வணிக கல்வி நிறுவன பட்டியலில் இடம்பெற்றுள்ளன. DNA and Rediff.com Global Business School Rankings 2012 போன்ற சர்வேக்களில், இவை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலமான பல்கலைக்கழகங்கள் * ஹாங்காங் பல்கலைக்கழகம்* லிங்னான் பல்கலைக்கழகம்* அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஹாங்காங் பல்கலைக்கழகம் போன்றவை புகழ்பெற்றவை. செலவின விபரங்கள் கல்விக் கட்டணம் மேற்கொள்ளும் படிப்பு மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றைப் பொறுத்து, ரூ.6,20,100 முதல் ரூ.9,84,000 வரை கல்விக் கட்டணம் மாறுபடுகிறது. தங்குமிட செலவு ஒரு கல்வியாண்டிற்கு, ரூ.90,000 முதல் ரூ.1,30,000 வரை செலவாகிறது. மாதாந்திர வாழ்க்கைச் செலவினம் சராசரியாக ரூ.37,000 வரை செலவாகிறது. ஆலோசனை ஒரு வெளிநாட்டு மாணவர் என்ற முறையில், 20 மணிநேரங்கள் வரை, பகுதிநேர பணி வாய்ப்புகளைப் பெறலாம். அதேசமயம், கோடைகால பணிகளுக்கு, நேரக் கட்டுப்பாடுகள் என்று எதுவுமில்லை. இந்திய மாணவர்களுக்கு Hinrich என்ற பெயரில் உதவித்தொகை திட்டம் வழங்கப்படுகிறது. ஜெர்மனி HSBC சர்வேயின்படி, வெளிநாட்டு மாணவர்களுக்கு, செலவு குறைந்த ஒரு நாடாக, ஜெர்மனி பட்டியலிடப்பட்டது. குறைந்த கல்விக் கட்டணம் மற்றும் படிப்பு முடிந்தபிறகு, வேலைத் தேடுவதற்கான 18 மாத தங்கியிருக்கும் சலுகை உள்ளிட்டவை, ஜெர்மனியை நாடி செல்ல, இந்தியா உள்பட பல வெளிநாட்டு மாணவர்களைத் தூண்டுகின்றன. பிரபல படிப்புகள் ஆராய்ச்சி தொடர்பான படிப்புகள் மற்றும் பிஎச்.டி., படிப்புகள். அதேசமயம், அந்நாட்டில் வழங்கப்படும் மருத்துவப் படிப்பு மட்டும், ஜெர்மன் மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. எனவே, அப்படிப்பை மேற்கொள்வோருக்கு ஜெர்மன் மொழியின் பரிச்சயம் தேவையாகிறது. அதேசமயம், வேறுபல படிப்புகள் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகின்றன. எனினும், ஜெர்மன் மொழியைப் பற்றிய அடிப்படை அறிவு இருப்பது பல வகையில் நல்லது. முக்கிய பல்கலைகள் Technical university MunichUniversity of HeidelbergUniversity of MunichUniversity of Freiburg செலவினங்கள் கல்விக் கட்டணம் ஜெர்மனியில், பொது பல்கலைக்கழகங்களில், கல்விக் கட்டணங்கள் என்று எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், செமஸ்டர் பங்களிப்பு என்று ரூ.4,400 வசூலிக்கப்படலாம். பிற படிப்புகள் மற்றும் பிறவகை பல்கலைகளுக்கு, கல்விக் கட்டணம், ரூ.43,800 முதல் ரூ.1,05,200 வரை வசூலிக்கப்படுகிறது. தங்குமிட செலவு ஒரு மாதத்திற்கு ரூ.19,300 முதல் ரூ.29,800 வரை செலவாகிறது. மாதாந்திர செலவு ரூ.43,800 மாதாந்திர செலவாக கணக்கிடப்படுகிறது. ஆலோசனை சர்வதேச மாணவர் அடையாள அட்டையின் மூலமாக, தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. மேலும், ஜெர்மன் அகடமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ், இந்திய மாணவர்களுக்கு, பலவிதமான உதவித்தொகை திட்டங்களை வழங்குகின்றன. ரஷ்யா ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டு நிலவரப்படி, 60% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வரும் ஆண்டுகளில் எண்ணிக்கை மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான காலநிலை மற்றும் மொழிப் பிரச்சினை உள்ளிட்ட பல தடைகளையும் கடந்து, ரஷ்யாவில் வெளிநாட்டு மாணவர்கள் அதிகமாக கலந்துகொள்வதற்கு மூலகாரணம், அங்கே கல்விக் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதுதான். பல படிப்புகள் ஆங்கில மொழியில் கற்பிக்கப்பட்டாலும், உள்ளூர் வாழ்க்கை வசதிகள் மற்றும் மக்களுடன் பழக, ரஷ்ய மொழியில் அடிப்படை படிப்பை மேற்கொள்வதும் அவசியமாகிறது. பிரபலமான படிப்புகள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் ரஷ்யாவில் பிரபலமானவை. இந்திய மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளை மேற்கொள்ள, ரஷ்ய நாட்டை குறிப்பாக தேர்வு செய்கின்றனர். அதேசமயம், பல மேலாண்மை மற்றும் மானுடவியல் படிப்புகள் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய பல்கலைக்கழகங்கள் Moscow Medical AcademyPeople Friendship University of Russia (RUDN)Moscow Energy Institute (MEI)St.Petersburg State Medical University செலவினங்கள் கல்விக் கட்டணம் படிப்பு மற்றும் பல்கலையைப் பொறுத்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை கல்விக் கட்டணங்கள் வேறுபடுகின்றன. பொதுவாக, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தங்குமிட செலவு மாதம் ரூ.2,500 முதல் ரூ.6,000 வரை செலவாகிறது. மாதாந்திர செலவினம் ரூ.8,500 முதல் ரூ.15,700 வரை செலவாகிறது. ஆலோசனை ஒவ்வொரு ஆண்டும், வெளிநாட்டு மாணவர்களுக்கென, சுமார் 3000 உதவித்தொகைகளை ரஷ்ய அரசாங்கம் வழங்குகிறது. இதைப் பற்றிய விபரங்களுக்கு www.en.russia.edu.ru. என்ற வலைதளம் செல்க. ஸ்பெயின் கடந்த 2012ம் ஆண்டில், வெறும் 155 மாணவர்கள் மட்டுமே ஸ்பெயினில் படித்தனர். இந்திய மாணவர்களைப் பொறுத்தவரையில், ஸ்பெயின் ஒரு கவர்ந்திழுக்கும் நாடாக இல்லை. இந்நாட்டில் பிரிட்டன் அல்லது ஜெர்மனி போன்று, பல புகழ்பெற்ற பல்கலைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், குறைந்தளவு கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் போன்றவை, பிற ஐரோப்பிய நாடுகளைவிட, ஸ்பெயினை சர்வதேச மாணவர்களுக்கு உகந்த ஒரு இடமாக ஆக்கியுள்ளன. பிரபலமான படிப்புகள் IE போன்ற சில பிரபலமான வணிகப் பள்ளிகள் இந்த நாட்டில் உள்ளன. மேலாண்மை மற்றும் வணிகப் படிப்புகளே, பல வெளிநாட்டு மாணவர்களால் விரும்பப்படுகின்றன. இவற்றை தவிர, ஆர்கிடெக்சர் மற்றும் மானுடவியல் துறை சார்ந்த படிப்புகளும் வெளிநாட்டு மாணவர்களால் விரும்பப்படுகின்றன. முக்கிய பல்கலைகள் IE Business schoolUniversitat de BarcelonaUniversidad Autonoma de MadridUniversistat Pompeu Fabra செலவின விபரங்கள் கல்விக் கட்டணம் முதுநிலைப் படிப்புகளுக்கு ரூ.81,000 முதல் ரூ.1,50,000 வரை செலவாகிறது. அதேசமயம், தனியார் பல்கலைகளில், கல்விக் கட்டணம் ஒப்பீட்டு அளவில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தங்குமிட செலவு சிலருடன் சேர்ந்து தங்குகையில், மாதத்திற்கு ரூ.16,800 முதல் ரூ.30,000 வரை செலவாகிறது. மாதாந்திர செலவுகள் ரூ.58,000 முதல் ரூ.75,000 வரை செலவாகிறது. இந்நாட்டில், பார்சிலோனா மற்றும் மேட்ரிட் ஆகிய நகரங்கள் செலவு மிகுந்தவை. ஆலோசனை சலமன்கா, சான்டியகோ டி கம்போஸ்டலா மற்றும் கிரானடா போன்ற நகரங்கள் செலவு குறைந்தவை என்பதை நினைவில் கொள்ளவும். எராஸ்மஸ் முன்டஸ் திட்டத்தின் மூலமாக, பல ஐரோப்பிய பல்கலைகளுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !