உள்ளூர் செய்திகள்

அழிவை நோக்கி ஆரோக்கியம்!

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வென்-ஜூய் ஹான் மற்றும் ஆசிரியர் குழு வெளியிட்ட ஆய்வின் முடிவின்படி, தங்கள் முழு வாழ்க்கையிலும் பாரம்பரிய முறைப்படி பகல் நேரங்களில் வேலை செய்த நபர்களுடன் ஒப்பிடும்போது, ​​மாறுபட்ட நேரங்களில் வேலைபார்த்தவர்கள் மனச்சோர்வு அறிகுறிகளுக்கு ஆளாகிஉள்ளது தெரியவந்துள்ளது.30 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட 7,000க்கும் மேற்பட்ட நபர்களின் தரவை பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், மாறுபட்ட வேலை அட்டவணைகளை கொண்ட நபர்களின் தூக்க முறைகள் சீர்குலைந்துள்ளதையும், உடல் மற்றும் மன ஆரோக்கியம் எதிர்மறையாக பாதிக்கப்பட்டிருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !