உள்ளூர் செய்திகள்

அறிவோம் எச்.பி.என்.ஐ.,

அணு அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுசக்தித் துறையால் 'ஹோமி பாபா தேசிய நிறுவனம் - எச்.பி.என்.ஐ.,' நிறுவப்பட்டது. முக்கியத்துவம்மும்பையில் கடந்த 2005ம் துவக்கப்பட்ட இந்நிறுவனம், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் பிரிவு 3ன் படி, நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றுள்ளது. நாக் அங்கீகாரத்துடன், என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையிலும் இடம் பெற்றுள்ள இந்நிறுவனம் அறிவியல், கணிதம், மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. வளாகங்கள்: பி.ஏ.ஆர்.சி., - மும்பை, ஐ.ஜி.சி.ஏ.ஆர்.,-கல்பாக்கம், ஆர்.ஆர்.சி.ஏ.டி.,- இந்தூர், வி.இ.சி.சி.,-கொல்கத்தா, எஸ்.ஐ.என்.பி.,-கொல்கத்தா, ஐ.பி.ஆர்.,-காந்திநகர், ஐ.ஒ.பி.,-புபனேஸ்வர், எச்.ஆர்.ஐ.,-அலகாபாத், டி.எம்.சி.,-மும்பை, ஐ.எம்.எஸ்சி.,-சென்னை, என்.ஐ.எஸ்.இ.ஆர்.,-புபனேஸ்வர்வழங்கப்படும் படிப்புகள்:கெமிக்கல் சயின்சஸ் துறை: பி.ஜி.டி., எம்.பில்., பிஎச்.டி., மற்றும் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.,இன்ஜினியரிங் துறை: பி.ஜி.டி., எம்.டெக்., பிஎச்.டி., மற்றும் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.,-பிஎச்.டி., லைப் சயின்சஸ் துறை: பி.ஜி.டி., பிஎச்.டி., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., மற்றும் பி.எச்டி., - கம்ப்யூட்டேஷனல் பயாலஜிபிசிக்கல் சயின்சஸ் துறை: பி.ஜி.டி., எம்.பில்., பிஎச்.டி., எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., பிஎச்.டி., -எர்த் அண்டு பிளானடரி சயின்சஸ் மற்றும் எம்.எஸ்சி., - மெடிக்கல் அண்டு ரேடியோலஜிக்கல் பிசிக்ஸ்அப்ளைடு சிஸ்டம்ஸ் அனலைசிஸ் துறை: பிஎச்.டி., ஒருங்கிணைந்த பிஎச்.டி., மற்றும் பிஎச்.டி., - சோசியல் சயின்சஸ்மேத்மெடிக்கல் சயின்சஸ் துறை: பிஎச்.டி., பிஎச்.டி.,-கம்ப்யூட்டர் சயின்ஸ், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.,-பிஎச்.டி., மற்றும் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., மெடிக்கல் அண்டு ஹெல்த் சயின்சஸ்: பிஎச்.டி., ஒருங்கிணைந்த எம்.டி.,/டி.எம்.,/எம்.சிஎச்.,-பிஎச்.டி., டி.எம்.ஆர்.ஐ.டி., பி.ஜி.டி.எப்.ஐ.டி., எம்.எஸ்சி.,-நர்சிங், எம்.எஸ்சி.,-கிளினிக்கல் ரிசர்ச், எம்.எஸ்சி.,-ஆக்குபேஷனல் தெரபி உட்பட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. சேர்க்கை முறை: மதிப்பெண் மற்றும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. பாடப்பிரிவை பொறுத்து, கேட், நீட், ஜெஸ்ட், நெட், என்.பி.எச்.எம்., டி.பி.டி., டி.எஸ்.டி., போன்ற தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகள் வாயிலாக தகுதியான மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விண்ணப்பிக்கும் முறை: www.hbni.ac.in எனும் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.உதவித்தொகை: தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் விருதுகள் வழங்கப்படுகின்றன.விபரங்களுக்கு: www.hbni.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !