உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கோடைகால இன்டர்ன்ஷிப்

போபாலில் உள்ள ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனம், கோடைகால ஆராய்ச்சி இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடிப்படை அறிவியல், பொறியியல் அறிவியல் மற்றும் பொருளாதார அறிவியல், கலை மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த கோடைகால ஆராய்ச்சி இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., -போபால் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியில் பங்கேற்பர்.இன்டர்ன்ஷிப் கால அளவு: மே 27 முதல் ஜூலை 20 வரைதகுதிகள்: பி.எஸ்சி., / பி.டெக்., / பி.இ., படிப்பை நிறைவு செய்தவர்கள் அல்லது 2வது, 3வது, 4வது ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் அல்லது முதலாமாண்டு எம்.எஸ்சி., /எம்.டெக்., சேர்க்கை பெற்றவர்கள் இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை: கல்வித்திறன் மற்றும் எழுத்துத்திறன் அடிப்படையில் தகுதியான மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.குறிப்பு: பட்டியலிடப்பட்ட திட்டங்களில், அதிகபட்சம் மூன்று திட்டங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆராய்ச்சி பணிகள் குறித்து கூடுதல் தகவல்களுக்கு, கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை பார்க்கலாம். பட்டியலிடப்படாத ஆசிரியர்கள், கோடைகால இன்டர்ன்ஷிப் திட்டங்களை வழங்கவில்லை. மேலும், ஆசிரியர்களை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதர விபரங்கள்: கோடைகாலப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பட்டியல் மே முதல் வாரத்தில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்தவித நிதி உதவியும் வழங்கப்படாது. இன்டர்ன்ஷிப் முடித்து விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.கட்டணம்: மாதம் ரூ.1,500 கட்டணத்தில் கல்வி நிறுவன விடுதியில் தங்குமிடம் வழங்கப்படுகிறது. உணவு கட்டணம் மாதம் ரூ.3,300. விண்ணப்பிக்கும் முறை: https://internship.iiserb.ac.in/internship/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு: இணையதளம்: www.iiserb.ac.inஇமெயில்: office_aa@iiserb.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !