உள்ளூர் செய்திகள்

நயம் மிகுந்த நாடகத் துறை

நம்மில் பலரும் பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது எங்கேனுமோ வாழ்வில் ஒருமுறையாவது நாடகம் பார்த்திருப்போம். ஒரு நாடகம் என்பது நகைச்சுவையாகவும் இருக்கலாம் அல்லது சோக முடிவைக் கொண்டதாகவும் இருக்கலாம். நாடகம் என்பது முற்றிலும் ஒரு குழு முயற்சி. கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர்கள், இயக்குநர், இசையமைப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரின் ஒன்றுபட்ட உழைப்புதான் நாடகமாக உருபெறுகிறது. நாடகத்துறையை எதிர்கால தொழிலாகத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று நீங்கள் உங்களின் பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ சொன்னால், அவர்களிடமிருந்து எதிர்மறையான பதில்தான் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அத்துறையை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாக நினைத்து, அதில் தங்களின் திறனை வெளிப்படுத்த நினைப்பவர்கள், அவர்களின் உற்சாகத்தை இழக்கத் தேவையில்லை. இத்துறைக்கு தேவைப்படும் பண்புகள் சுதந்திரமாக சிந்திக்கும் திறன், நல்ல பேசும் மற்றும் கவனிக்கும் திறன், பகுப்பாய்வுத் திறன், ஒழுங்கு மற்றும் தீர்மானம், விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை, தனியாகவும், குழுவாகவும் இயங்கும் திறன், நெருக்கடியான சூழலில் வெற்றிகரமாக செயல்படும் திறன், பிற மனிதர்களுடன் எளிதில் கலந்து பழகும் திறன், முனைப்பு மற்றும் புத்தாக்கத் திறன், வெவ்வேறு சூழல்களுக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளுதல் மற்றும் அடிக்கடி செய்ய வேண்டிய பயணங்களை சலிக்காமல் மேற்கொள்ளும் திறன். நாடகம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், நாட்டியக் கலைஞர், விமர்சகர், கதை வசனகர்த்தா, சண்டைப் பயிற்சியாளர், வடிவமைப்புக் கலைஞர், அறிவிப்பாளர், வர்ணனையாளர், உடை அலங்கார நிபுணர், பொழுதுபோக்கு கலைஞர், தொழில்நுட்பக் கலைஞர், நகைச்சுவை கலைஞர், அசோசியேஷன் மேனேஜர், பாக்ஸ் ஆபிஸ் மேனேஜர், ஸ்டேஜ் மேனேஜர், ப்ரொடக்ஷன் அசிஸ்டன்ட், சவுண்ட் டெக்னீஷியன், டெக்னிக்கல் ரைட்டர், நாடகப் பயிற்சியாளர், டிராமா தெரபிஸ்ட், திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பணிக்குழு, திரைப்பட/தொலைக்காட்சி/வானொலி தயாரிப்பாளர்கள், நடிப்புத்திறனை விளம்பரப்படுத்துபவர், அலங்காரப் பொருள்களுக்கான நிபுணர், ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனை கலைஞர், உற்சாகமூட்டும் பேச்சாளர் மற்றும் டிஸ்க் ஜாக்கி போன்ற ஏராளமான வேலை வாய்ப்புகள் இத்துறையில் குவிந்திருக்கின்றன. இத்துறை சார்ந்த படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள் Madras university - Madras Annamalai university - Tamilnadu Bharathidasan university - Trichy Bharathiyar university - Coimbatore Avinashilingam university for women - Coimbatore Andra university - Waltair Allahabad university - Varanasi Bangalore university - Bangalore Mysore university - Mysore Mumbai university - Mumbai Pune university - Pune.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !