சட்டப் படிப்புகள்
வழக்கறிஞர்களுக்கு, வழக்காடும் தொழிலில் மட்டுமே வாய்ப்புகள் இருப்பதில்லை. ஒருவர் சட்டப்படிப்பில் ஸ்பெஷலைசேஷன் செய்திருந்தால், வணிகம், கல்வித்துறை மற்றும் அரசியல் உள்ளிட்ட பல துறைகளிலும் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அறிவியல் தொடங்கி நிதித்துறை வரை, நல்ல ஆழமான அறிவு இருக்க வேண்டும். இத்துறையிலுள்ள பரந்த வாய்ப்புகளால்தான், இன்றைய நிலையில் பல மாணவர்கள் இதை விரும்புகிறார்கள். சட்டப்படிப்பில் சேருதல் க்ளாட்(சி.எல்.ஏ.டி) எனப்படும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேறினால்தான், பங்குகொள்ளும் 11 கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் சட்டப்படிப்பில் சேர முடியும். க்ளாட் தேர்வைத் தவிர்த்து, வேறு சில நுழைவுத் தேர்வுகளும் உள்ளன. அதன் மூலம் எஸ்.எஸ்.எல்.சி, பி.எஸ்.எஸ்.எல்.சி, டெல்லி பல்கலை, க்யூ.எல்.டி.டி., ஜெ.எல்.எஸ், ஐ.எல்.எஸ், ஜி.எல்.எஸ். போன்ற பல முக்கிய சட்டக் கல்வி நிறுவனங்களில் சேரலாம். மேலும் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மொத்தமாக சேர்த்து சுமார் 50 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தேர்வானது, ஆங்கிலம், பொது அறிவு, லாஜிக்கல் ரீசனிங், நடப்பு நிகழ்வுகள், ஆரம்பநிலை கணிதம், சட்ட திறனாய்வு மற்றும் விழிப்புணர்வு மற்றும் மதிப்பீடு போன்ற பல பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். மாதிரி வினாத்தாள் தொகுப்புகள், சிறப்பு பயிற்சி மையங்கள் போன்றவை மாணவர்களுக்கு தேர்வுக்கு தயாராவதற்கான போதுமான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. வேலை வாய்ப்புகள் முதுநிலை க்ளாட் தேர்வை எழுதியவர்கள், ஒருங்கிணைந்த கல்லூரிகளில் மாஸ்டர்ஸ் படிக்க சேரலாம். மேலும் பிற சட்டக் கல்லூரிகளில் அல்லது வெளிநாடுகளில், சட்டப்படிப்புகளில் சிறப்பு படிப்புகளை மேற்கொள்ளவும் முடிவெடுக்கலாம். அட்வொகேட், அட்டர்னி ஜெனரல், கம்பெனி செக்ரடரி, மாவட்ட அட்டர்னி, சட்ட ஆலோசகர், எல்.பி.ஓ, மேஜிஸ்ட்ரேட், நோட்டரி கமிஷனர், பப்ளிக் ப்ராசிகியூடர், சாலிசிட்டர் போன்ற பல தொழில் வாய்ப்புகள் உள்ளன. ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கும்போது, அது எந்தளவிற்கு உங்களுக்கு வருமானத்தை தரும் என்று கணக்கிட்டு தேர்ந்தெடுப்பதைவிட, அத்தொழிலில் நீங்கள் எந்தளவிற்கு சிறப்பாக செயல்பட முடியும் மற்றும் இறுதியில் அதனால் கிடைக்கும் திருப்தி போன்றவற்றை மனதில் வைத்தே, ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் உங்களின் முழு விருப்பம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.