நிதித்துறை எம்.பி.ஏ. படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள்
நிதித்துறை(பைனான்ஸ்) பணிகள் என்பவை பரவலான அர்த்தங்களையும், பிரிவுகளையும் கொண்டவை. அதை, கார்ப்பரேட் நிறுவனப் பணிகள் மற்றும் நிதி நிறுவனப் பணிகள் என்று இருவகைப்படுத்தலாம். (நிறுவனங்களில் பதவிகள் வேறுபடும்) கார்ப்பரேட் நிறுவனங்களில் நிதித்துறைப் பணி வர்த்தக நிறுவனங்களில், தலைமை நிதித்துறை அதிகாரி(சி.எப்.ஓ) ஒருவர் இருப்பார். இதர நிதித்துறை அதிகாரிகள் இவருக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்களில் கன்ட்ரோலர் மற்றும் பொருளாளர் ஆகியோர் முக்கியமானவர்கள். பல நிறுவனங்களில், வியூகரீதியான மற்றும் தொலைநிலைத் திட்டங்கள், அதிகளவு நிதி தொடர்பானவை என்பதால், தலைமை நிதித்துறை அதிகாரியுடன் ஆலோசிக்கப்படலாம். சேகரித்தல், அளவிடுதல் மற்றும் நிறுவனத்தின் உள்நடவடிக்கைகளின் மூலம் பெறப்படும் தரவுகளை மதிப்பீடு செய்தல் போன்றவை கன்ட்ரோலரின் கட்டுப்பாட்டில் வரும். பொதுவாக, சி.ஏ\எம்.பி.ஏ(நிதித்துறை) பட்டதாரிகள் இந்தப் பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். நிதி சந்தைகள் மற்றும் நிறுவனங்களுடன் போன்றவைகளுடன் தொடர்புடைய பணிகள் பொருளாளரின் கீழ் வரும். பொதுவாக "எம் மற்றும் ஏ" தொடர்புடைய பணிகள் பொருளாளரின் கீழ் வரும். பொதுவாக இந்தப் பிரிவுகளுக்கு எம்.பி.ஏ. பட்டதாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இதன்மூலம் அத்துறை நடவடிக்கைகளை கவனித்து, போதுமான அறிவைப்பெற அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நிதித்துறையில் எம்.பி.ஏ. படித்தவர்கள், பெரு நிறுவனங்கள், வங்கிகள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் போன்றவைகளில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் இவர்களுக்கு ஏராளமான பணிவாய்ப்புகள் உள்ளன. நிதித்துறையில் எம்.பி.ஏ. படித்தப் பிறகு தனியார் துறையில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் தனியார் துறையில் ஏராளமாக கம்பெனிகள், இத்துறை மாணவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளன. இத்துறையில், கைநிறைய சம்பளம் கிடைக்கிறது. பொதுத்துறையை விட, இந்தத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே இதில் சிறந்த வாய்ப்புகள் ஏராளம். இத்துறையில் ஆரம்ப நிலையில் கிடைக்கும் பணி வாய்ப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை, Credit risk management analyst Finanacial Research analyst Financial/securities/Investments analyst Personal financial adviser Portfolio Manager பொருளாதாரம், வங்கியியல், அக்கவுன்டிங், சந்தைக் கட்டமைப்பு ஆகியவைப் பற்றி தங்களின் எம்.பி.ஏ. படிப்பில் படித்த மாணவர்கள், பல நிறுவனங்களில், குறிப்பாக வங்கி சார்ந்த நிறுவனங்களில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுகிறார்கள். நிதித்துறை(பைனான்ஸ்) எம்.பி.ஏ. முடித்தப்பிறகு அரசுத்துறை பணி வாய்ப்பு இத்துறை மாணவர்களுக்கு, தனியார் துறையைப் போலவே, அரசுத் துறைகளிலும் பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. நிர்வாகிகள், நிதி அதிகாரிகள் அல்லது பல துறைகளில் கணக்காளர்கள்(அக்கவுண்டன்ட்) ஆகிய பணிகளைப் பெறலாம். மேலும் மத்திய மனித வளத்துறையிலும் அவர்களுக்குப் பணி வாய்ப்புகள் உள்ளன. நிதித்துறைஎம்.பி.ஏ. படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறக்கூடிய சில அரசு நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Bharat Dynamics limited Centre for Development of advance computing HLL life care limited National Dairy development board(NDDB) National small industries corporation limited(NSIC) National Thermal power corporation(NTPC) Rajastan Electronics and instruments limited(REIL) Shell technologies The Repatriates co-operative finance and development bank limited Visakapatnam steel plant மேலே குறிப்பிட்டவை மட்டுமல்லாது, இந்தியாவில் இன்னும் ஏராளமான நிறுவனங்கள், இத்துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை தரும் வகையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நிதித்துறை எம்.பி.ஏ. படிப்பிற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் இத்துறை மாணவர்களுக்கு அதிகம். அதிக சம்பளமும் கிடைக்கிறது. அதேசமயம் வெளிநாட்டில் நல்ல வேலை வாய்ப்பை பெற வேண்டுமெனில், போதுமான பணி அனுபவமும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையின் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டில் கிடைக்கும் சிலவித பணிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை, Banking analyst Investment risk analyst M and A analyst Finance manager Lead analyst research R and D portfolio analysis மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை வாய்ப்பை தருவதோடு மட்டுமல்லாமல், விரும்பும் நபர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சியும் தருகின்றன. இதன்மூலம், நடைமுறைப் பயிற்சியையும், அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் இந்தப் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இப்படிப்பை மேற்கொண்டோருக்கான உயர்நிலை பணி வாய்ப்புகள் போதிய அனுபவத்துடனும், சிறந்த அறிவுடனும் இருந்தால் ஒருவர் இத்துறையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பான பணியைப் பெற முடியும். அத்தகைய சிறந்த பணி நிலைகளுள் சில, கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை, Finance Manager for speciality markets Financial analysis manager Finanacial analyst Financial planning senior analyst Global capital market sales and trading Investment banking associate Risk management Senior Financial analyst பாரம்பரிய பணிகளைத் தவிர்த்து, கார்ப்பரேட் பைனான்ஸ், டிரேடிங் சப்போர்ட், வெல்த் மேனேஸ்மென்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட், பைனான்சியல் அனலிசிஸ் அன்ட் டிரேடிங் போன்ற துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. இதைத்தவிர பைனான்ஸ் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள், ரிசர்ச் அன்ட் அசெட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பிற துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. பொதுவில், மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் பணிபுரிபவர்கள், சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் உதவி, வழிகாட்டுதல், ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்க கடமைப்பட்டவர்கள். எம்.பி.ஏ. பைனான்ஸ் முடித்தவர்களுக்கான பணி வாய்ப்புகள் வங்கித்துறையானது, மாணவர்கள் மத்தியில் பரவலாக விரும்பப்படும் ஒரு துறையாக இன்று உள்ளது. வங்கிப் பணிகள், வணிகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பானதாக இருந்தாலும், அத்துறை உயர் பதவியில் இருக்கும் பலர், அத்துறை சாராத பாடங்களை படித்து வந்தவர்களாகவே இருக்கின்றனர். பன்னாட்டு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் உயர் பதவியில் இருப்பவர்கள் எம்.பி.ஏ. முடித்தவர்கள் என்று நினைப்பது தவறு. ஏனெனில் இன்று நடத்தப்படும் பலவித போட்டித் தேர்வுகள் நிலைமையை மாற்றி விட்டன. பொதுத்துறை வங்கிகள் தற்போது மேலாண்மை பட்டதாரிகள் மற்றும் சி.ஏ, சி.எப்.ஏ. பட்டதாரிகளை பணியமர்த்தினாலும், போட்டித்தேர்வுகளின் மூலமும், பொதுத்துறை வங்ககளில் நல்ல வாய்ப்புகளைப் பெற முடியும். இன்றைய தாராளமய உலகில் பெருகிவரும் தனியார் வங்கிகளால், அத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. கிரெடிட் கார்டு, ஹவுசிங் லோன், பர்சனல் லோன், மீச்சுவல் பண்ட்ஸ் போன்ற பல பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக, நல்ல மொழித்திறன், தகவல் தொடர்பு திறன், வாடிக்கையாளரை கையாளும் திறன், தேவையான விழிப்புணர்வு, வங்கித் தொழிலைப் பற்றிய போதுமான அறிவு போன்றவற்றை ஒரு பணியாளரிடம் வங்கிகள் எதிர்பார்க்கின்றன. ஒருவர், தனியார் அல்லது வெளிநாட்டு வங்கியில், ஆரம்ப நிலையல்லாது, சற்றே உயர்நிலையில் பணிக்கு சேர விரும்பினால், அவர் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பு படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் நல்ல கணினி அறிவும் முக்கியமானதாக கருதப்படும். ஒவ்வொரு வங்கியிலும் வரவேற்பு(ப்ரண்ட் ஆபிஸ்) அதிகாரி இருப்பார். மேலும், பணப் பரிவர்த்தனைகள், பொதுவான பதிவு வேலைகள் மற்றும் ஒட்டுமொத்த பணிகளை கவனிக்கும் ஒரு மேற்பார்வையாளர் இருப்பார். வங்கிகளில் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் ஆரம்ப நிலையில் ரூ.6000 முதல் ரூ.8000 வரை கிடைக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் பணிக்கு சேரும் எம்.பி.ஏ. பட்டதாரிகள், மாதம் ரூ.25000 முதல் ரூ.30000 வரை பெறுகிறார்கள். வணிக வங்கிகள் கீழ்கண்ட வகைகளில் பிரிக்கப்படுகின்றன. அவை, Public sector banks Private sector banks Foreign/Multinational banks