உள்ளூர் செய்திகள்

ஜிமேட் இந்தியா இணையதளம் துவக்கம்

மேலாண்மையியல் துறையில் உயர்கல்வி பயில, ஜிமேட்(GMAT) மதிப்பெண் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் 6 பி-ஸ்கூல்கள் உட்பட உலகம் முழுவதும் 200 தலைசிறந்த பி-ஸ்கூல்கள் ஜிமேட் மதிப்பெண்ணை ஏற்றுக் கொள்கின்றன. இந்நிலையில் ஜிமேட் நிர்வாகம் ‘ஜிமேட் இந்தியா’ இணையதளத்தைத் துவக்கி இருக்கிறது. ஜிமேட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு இத்தளம் பயனுள்ளதாக இருக்கும். தேர்வு அறிவிப்புகள், கல்வி நிறுவனங்கள் எவ்வகையில் ஜிமேட் மதிப்பெண்ணை, சேர்க்கைக்காகப் பயன்படுத்துகின்றன, தேர்வு குறித்த அடிப்படை விஷயங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். சிறந்த மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட பேட்டிகளையும் வீடியோ வடிவில் காண முடியும். விவரங்களுக்கு www.mba.com/landingpages/india.asp என்ற இணைப்பைச் சுட்டவும். * கடல்சார் படிப்பில் பிஎச்.டி., ஆய்வு CSIR National Institute of Oceanogarphy கடல்சார்ந்த கடலியல், புவி அறிவியல் துறைகளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. NET-JRF/SRF -CSIR -UGC, DST's INSPIRE போன்ற தேசிய அளவிலான பெல்லோஷிப் பெற்றுள்ள முதுநிலை அறிவியல் மாணவர்கள் இதற்கு தகுதி பெற்றவர்களாவர். CSIR பொன்விழாஆண்டு ஆய்வு இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், ஆய்வுசெய்ய இது ஒரு வாய்ப்பாகும். மேலும் விவரங்களுக்கு http://www.nio.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். * பசுமை, சூழல் சார்ந்த சான்றிதழ் படிப்பு வரும் 2030ம் ஆண்டில் பசுமைசார்ந்த இரண்டு கோடிப் பணியிடங்கள் உருவாகும் என ஐநா தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு உலக வன ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. பசுமை சார்ந்த பொருளாதாரத்துக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், Indian Astrobiology Research Centre- IARC வழங்கும் சான்றிதழ் படிப்புகள் சேரலாம். வனம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த இப்படிப்பில் சேர தேசிய அளவில் ஆன்லைன் முறையில் MCQ நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். மேலும் விவரங்களுக்கு http://forests.astrobiology.co.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !