உள்ளூர் செய்திகள்

ஸ்கேனிங் படிக்க வேண்டுமா?

மருத்துவத் துறையில், மேம்பட்ட உயிரியல் வளர்ச்சியின் காரணமாக, ஸ்கேனிங் துறை பல்வேறு முன்னேற்றங்களை காண்கிறது. கருவுறுதலின் போது ஏற்படும் மரபணுக்களின் மாற்றம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அதன் அசைவுகளை கண்காணிக்க மேம்பட்ட உயிரியல் தொழில்நுட்பம் பயன்படுகிறது. இப்படிப்பை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. அவை: கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமெரிக்காவில் சாண்டா குரூசில் உள்ள இப்பல்கலைக்கழகத்தில், மாலிக்குலர் செல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. தகுதி: சி.வி., ஜி.ஆர்.இ., மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்.,தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். இப்படிப்பிற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு http://mcd.ucsc.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம். யேல் பல்கலைக்கழகம்இப்பல்கலைக்கழகத்தில் உள்ள மாலிக்குலர், செல்லுலர் அண்ட் டிபார்ட்மென்ட் பிரிவில், முதுகலை மற்றும் பிஎச்.டி., படிப்புகளை வழங்குகிறது. தகுதி: இப்படிப்பிற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சி.வி.,ஜி. ஆர்.,இ மற்றும் ஐ.இ.எல். டி.எஸ்.,தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப் படையில் சேர்க்கை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு www.yale.edu/mcdb என்ற இணையதளத்தை பார்க்கலாம். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்இப்பல்கலைக்கழகம் ஸ்கேனிங் துறையில் பிஎச்.டி., படிப்புகளை வழங்குகிறது. தகுதி: இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பிற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  விவரங்களுக்கு http://devbio.stanford.edu/education/ என்ற இணையதளத்தை பார்க்கலாம். அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகம்இப்பல்லைக்கழகம் ஜெனிட்டிக்ஸ், செல் மற்றும் டெவலப்மென்டல் பயாலஜி போன்றவற்றில் இளங்கலை படிப்பை வழங்குகிறது. தகுதி: இதற்கு பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி.வி.,ஜி.ஆர்.இ., மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்.,தேர்வில் 6 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு www.sols.asu.edu/ugrad/index.php என்ற இணையதளத்தை பார்க்கலாம். கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமெரிக்கா பெர்க்லியில் உள்ள இப்பல்கலைக்கழகத்தில் மாலிக்குலர், செல் உயிரியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. தகுதி: இப்படிப்பிற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  விவரங்களுக்கு www.mcb.berkeley.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !