உள்ளூர் செய்திகள்

தேர்வு செய்யுங்கள் தொல்லியல் துறையை

பழங்கால மனிதர்களின் நாகரீகம், வாழ்க்கை முறை, நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கட்டடக்கலை, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், தத்துவஞானம், நிலஅமைப்பு போன்றவற்றை ஆராய்ந்து படிக்கும் துறையே தொல்லியல் (ஆர்க்கியாலஜி) எனப்படும். ஆர்க்கியாலஜி எனும் சொல் கிரேக்க மொழி வகையைச் சேர்ந்தது. ஆர்க்கியாஸ் என்றால் பழங்காலப் பொருட்கள் என்றும், லோகோஸ் என்றால் அறிவியல் தத்துவம் என்றும் பொருளாகும். தொல்லியல் படிப்பானது, புவியியல், வரலாறு, மானுடவியல், வேதியியல், நிலவியல், கலை மற்றும் இலக்கியம் உள்ளிட்டவையின் கலவையாகும். சுற்றுப்புற பாதுகாப்பு, நகர அமைப்பு மற்றும் நகர்ப்புற சமூகம் உள்ளிட்ட விஷயங்களை முறைப்படியாக மேற்கொள்வதற்கு இந்த படிப்புகள் அவசியமாகிறது. இந்திய தொல்லியல் ஆய்வகம் இந்தியாவின் கலை சார்ந்த பாரம்பரியங்களை பாதுகாப்பதற்காக, இந்திய தொல்லியல் ஆய்வகம் எனும் அமைப்பு 1862ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ஜெனரல் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம், இவ்வமைப்பின் முதல் இயக்குநராக இருந்தார். தொல்லியல் பற்றிய விழிப்புணர்வை இந்தியாவில் ஏற்படுத்தியவர். இந்திய தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். தொல்பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்ப இந்தியா, சுமார் 24 வட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. பணிகள் இந்தியாவின் தொன்மையை விளக்கும் பழங்கால கட்டடங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதும், பராமரிப்பதும் தொல்லியல் துறையின் முதன்மை பணியாகும். தகுதிகள்:1. இளநிலை பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் படிப்புக்கு, பிளஸ் 2 தகுதி போதுமானது.2. டிப்ளமோ/முதுநிலை டிப்ளமோ/ முதுநிலை உள்ளிட்ட தொல்லியல் படிப்புகளுக்கு, இளநிலை படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தொல்லியல் ஆய்வாளர் (ஆர்க்கியாலஜிஸ்ட்) தொல்லியல் சார்ந்த கண்டு பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் தொல்லியல் ஆய்வாளர் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு முதன்மையானது களப்பணி. சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பயிலும் நிறுவனங்கள்:1. இந்திய தொல்லியல் ஆய்வகம், புதுடில்லி2. அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்.3. ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்.4. பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு.5. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி.6. சென்னை பல்கலைக்கழகம், சென்னை.7. கோல்கட்டா பல்கலைக்கழகம், கோல்கட்டா.8. மைசூரு பல்கலைக்கழகம், நாகார்ஜீனா நகர்.9. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், பரோடா. 10. குஜராத் பல்கலைக்கழகம், ஆமதாபாத். வேலை வாய்ப்புகள்:தொல்லியல் படிப்பை வெற்றிக்கரமாக முடித்தவர்களுக்கு, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. கல்லூரியில் ஆசிரியராகவும் மற்றும் ஆய்வுக் கூடங்களிலும் பணி புரியலாம். அரசு ஏஜன்சிகளிலும் வேலை வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !