உள்ளூர் செய்திகள்

நாணயங்களை ஆய்வு செய்யும் படிப்பு

நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் மற்றும் அனைத்து வித பண பரிவர்த்தனை சாதனங்களை சேகரிப்பது, ஆராய்வது குறித்து படிக்கும் படிப்பே நாணய ஆய்வியல். இதனை ஆங்கிலத்தில் நுமிஸ்மாடிக்ஸ் என்பர். இத்துறை வல்லுனர்களை நுமிஸ்மாடிஸ்ட் என அழைப்பர். வரலாற்றை தெரிந்து கொள்ள, நாணய சேகரிப்பில் ஆய்வாளர்கள் ஈடுபடுகின்றனர். தங்கம், செம்பு, தாமிரம் போன்ற உலோகங்களில், ஆராய்ச்சியாளர்களால் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை ஆராய்ச்சி செய்வதன் மூலம், பல வரலாற்று நிகழ்வுகள், வர்த்தக பரிமாற்றங்கள் ஆகியவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில் நாணய ஆய்வியல் படிப்பு, முக்கியத்துவம் பெறுகிறது. கல்வித் தகுதி இத்துறையில், வரலாற்று பாடத்தில் ஆர்வமுள்ளவர்கள் நுழையலாம். நாணய ஆய்வியலில், இந்தியாவை பொறுத்தவரை பிராமி, தேவநகரி போன்ற மொழிகளை அறிந்திருப்பது கூடுதல் தகுதி. பழங்கால இந்திய நாணயங்களில் பெரும்பாலும் இந்த மொழி எழுத்துக்களே இடம் பெற்றுள்ளன. பிளஸ் 2, இளநிலையில் வரலாறு படித்தவர்கள், நாணய ஆய்வியல் துறையில் முதுநிலை படிப்புகளை படிக்கலாம். இந்தத் துறையில் முதுநிலை டிப்ளமோ, பி.எச்டி., ஆகிய படிப்புகளும் உள்ளன. வழங்கப்படும் படிப்புகள் எம்.ஏ., நுமிஸ்மாட்டிக்ஸ், எம்.ஏ., பண்டைய இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. இது தவிர எம்.ஏ., வரலாறு படித்தவர்களும் இந்தத் துறையில் சாதிக்கலாம். இதில் பி.எச்டி., முடிப்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. வேலைவாய்ப்பு இந்தத் துறை வல்லுனர்களுக்கு, இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு, தொல்லியல் துறையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வரலாறு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடும் துறை என்பதால், உலகளவில் இவர்களின் தேவை இருக்கிறது. கல்வி நிறுவனங்கள் * மும்பை பல்கலைக்கழகம், மும்பை* பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி* கோல்கட்டா பல்கலைக்கழகம், கோல்கட்டா* டாக்டர் ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகம்,    மத்தியபிரதேசம்* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன்    நுமிஸ்மாடிக்ஸ், நாசிக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !