பணி மேம்பாட்டுக்கு சில குறிப்புகள்
அ. நல்ல ஆடையும், புன்னகையும் அணியுங்கள் நன்றாக ஆடை அணிபவர்களையே நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக, திறமையாளர்களாக, கடினமாக உழைக்கும் தலைவர்களாக பலரும் அடையாளம் காணுகிறார்கள். எனவே நீங்கள் அணியும் ஆடையில் அக்கறை செலுத்துங்கள். பணியிடத்தில் நம் முகத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையையும் தவழவிட வேண்டும். இது செயற்கையான விஷயமாக தோன்றலாம். ஆனால் கடுமையான அலுவலகச்சூழலை சரி செய்யும் கருவியாக நமது புன் னகை செயல்படும் என்பதை மறந்துவிட வேண்டாம். ஆ. உங்கள் ஊக்க உணர்வை புதுப்பிக்கவும்: ஒவ்வொரு பணியிலும் சோர்வுறச்செய்யும் அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பணியில் ஏற்படும் சோர்வுகளை ஒருவர் எவ்வாறு கையாள்கிறார் என்பது கடுமையான சவாலாக உள்ளது. இப்படிப்பட்ட சோர்வுக்கு நாம் துணை நின்று விட்டால் பலமிழந்து, வேலையிலிருந்தே விலகும் நிலை ஏற்பட்டு விடலாம். எனவே ‘என்னால் முடியும்’ என்ற எண்ணங்களை வளர்ப்பது நமது ஊக்க உணர்வை வளர்ப்பதுடன் பணியிட மேம்பாட்டிற்கும் வழி வகுக்கும். இ. கால வரையறைகளை மட்டும் கவனித்தால் போதாது:பொதுவாகவே பணியிடத்தில் உள்ள வேலைகள் கடுமையாகிக்கொண்டே வருவதை நாம் அறிவோம். இலக்குகளை நிர்ணயித்தல், கால வரையறைக்குள் இலக்குகளை எட்டுதல் என்று முடுக்கிவிடப்பட்ட இயந்திரங்களாய் வேலைக்கு செல்பவர்கள் மாறி விடுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சில அடிப்படையான விஷயங்களை மறந்துவிட வாய்ப்புகள் உள்ளது. கீழேயுள்ள 5 அடிப்படை கேள்விகளை அவ்வப்போது எழுப்பி விடை தேட முயற்சி செய்யுங்கள்.* உங்கள் எதிர்பார்ப்புகள் எந்த அளவு உண்மையானது? பிறர் எதிர்பார்ப்பதை விட அதிகம் செய்வதும், எதிர்பார்ப் பிற்கும் அதிகமான அளவு செய்து முடிப்பதும் நல்ல பயன்தரும்.* பணியில் உங்களைப் பற்றிய விமர்சனங்களை பெறுகிறீர்களா? உங்கள் மேலதிகாரியிடம் உங்கள் பணி குறித்த கருத்துக்களை அவ்வப்போது பெற முயற்சி செய்யுங்கள். * உங்கள் பணியின் தன்மைக்கேற்ற ஆடை அணிவது, செயல்படுவது என்ற கோணத்தில் உங்களைப்பற்றி யோசியுங்கள். உங்களைப்பற்றி பிறர் எந்த இமேஜ் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த வழியில் செயல்படத் துவங்குங்கள்.* உங்கள் வேலையில் உங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்துகிறீர்களா என்று யோசியுங்கள். வரையறுக்கப் பட்ட பணி எதிர்பார்ப்புகளை விட அதிகமாக உழைப்பது நிச்சயம் வெற்றியைத்தரும். ஈ. உங்கள் சாதனைகளை பட்டியலிடுங்கள்:எடுத்துக்கொண்ட புராஜக்டுகளிலும், இலக்குகளை எடடியதிலும் நீங்கள் அடைந்த சாதனைகளுக்கான ஆதாரங்களை முறையாக ஒரு பைலில் சேமிக்க ஆரம்பியுங்கள். உங்களை பாராட்டி வந்த கடிதங்கள், பணியிடத்தில் நீங்கள் பெற்ற சிறப்புக்கல்வி, பயிற்சி போன்றவற்றை இந்த பைலில் பத்திரப்படுத்துங்கள். உங்களை பாராட்டி உங்கள் மேலதிகாரி இ-மெயில் அனுப்பினாலோ, மெமோ அனுப்பினாலோ அதனையும் மறந்து விடமால் பைலில் சேருங்கள். உங்கள் அலுவலகத்துக்கோ, துறைக்கோ உங்களால் பிரத்யேகமாக கிடைக்கும் கூடுதல் பணியுதவிகளையும் பதிவு செய்து வாருங்கள். நம்மைப்பற்றியும், நம் சாதனைகளை பற்றியும் நமது மேலதிகாரிகளுக்கு தெரியும் என்றாலும் அவரின் ஞாபக மறதியோ, அதிகாரியின் எதிர்பாராத இடமாறுதலோ நமது எதிர்காலத்தை பாதித்துவிடாமலிருக்க இந்த பைலிங் முறை அபரிமிதமாகக் கை கொடுக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.