மலைப்பகுதியினருக்காக ஒரு பல்கலைக்கழகம் - சிறந்த கல்வி நிறுவனம் (39)
மேகாலயாவின் ஷில்லாங்கில் 1973ம் ஆண்டு ‘நார்த் ஈஸ்டர்ன் ஹில்’ பல்கலைக்கழகம் (என்.இ.எச்.யூ.,) தொடங்கப்பட்டது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் நோக்கில் இந்த மத்திய பல்கலைக்கழகம் ஷில்லாங்கில் அமைந்தது. இது தொடங்கப்பட்ட போது மேகாலயா, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநிலங்களை சேர்ந்த கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. பின்னர் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டன. தொடக்கத்தில் வாடகை கட்டடத்தில் இந்த பல்கலைக்கழகம் இயங்கியது. பின்னர் இதற்காக அரசு சார்பில் ஆயிரத்து 225 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 1991ம் ஆண்டில் புதிய வளாகத்துக்கு இந்த பல்கலைக்கழகம் மாற்றப்பட்டது. இங்குள்ள துறைகள்- காமர்ஸ்- பொருளாதாரம்- லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சயின்ஸ்- கல்வி- ஆங்கிலம்- கரோ- இந்தி- காசி- லிங்குவிஸ்டிக்ஸ்- பிலாசபி- அடல்ட்ஸ் அண்டு கன்டினியூயிங் எஜுகேஷன்- டிஸ்டன்ஸ் எஜுகேஷன்- ஆந்த்ரபாலஜி- புவியியல்- என்விரான்மென்டல் ஸ்டடீஸ்- ரூரல் டெவலப்மென்ட் அண்டு அக்ரிகல்சுரல் புரடக்ஷன்- பயோகெமிஸ்ட்ரி- பயோடெக்னாலஜி- தாவரவியல்- உயிரியல்- வேதியியல்- இயற்பியல்- கணிதம்- ஸ்டாடிஸ்டிக்ஸ்- பள்ளிக் கல்வி- வரலாறு- பொலிட்டிக்கல் சயின்ஸ்- சோஷியாலஜி- சட்டம்- கல்சுரல் அண்டு கிரியேட்டிவ் ஸ்டடீஸ்- எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்- இன்பர்மேஷன் டெக்னாலஜி- அடிப்படை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தற்போது 53 கல்லூரிகள் என்.இ.எச்.யூ.,வுடன் இணைந்துள்ளன. இந்த பல்கலைக்கழக நூலகத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகம் அதே மாநிலத்தில் துரா நகரில் அமைந்துள்ளது. இது 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில்- அக்ரிகல்சுரல் புரடக்ஷன் அண்டு ரூரல் டெவலப்மென்ட்- மேனேஜ்மென்ட்- ஆங்கிலம்- கரோ- கல்வி ஆகிய துறைகள் உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் எட்டு விடுதிகள் உள்ளன. இவற்றில் 5 மாணவர்களுக்கும், 3 மாணவிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 30 ஆண்டுகளுக்குள்ளாக மேகாலாயாவின் கல்வி, கலாசார, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் கல்விநிறுவனமாக உயர்ந்துள்ளது.