உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களுக்கு விவசாய பல்கலைக்கழகம் - சிறந்த கல்வி நிறுவனம் (40)

மணிப்பூரின் இம்பால் அருகே இராய்செம்பாவில் அமைந்துள்ளது மத்திய விவசாய பல்கலைக்கழகம். 1993ம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த மாநிலங்களை சேர்ந்த ஏழு கல்லூரிகள் இந்த விவசாய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன. அவை- காலேஜ் ஆப் வெடினரி சயின்சஸ் அண்டு அனிமல் ஹஸ்பெண்டரி, மிசோரம்- காலேஜ் ஆப் அக்ரிகல்சர், மணிப்பூர்- காலேஜ் ஆப் பிஷரீஸ், திரிபுரா- காலேஜ் ஆப் ஹார்டிகல்சர் அண்டு பாரஸ்டரி, அருணாச்சல பிரதேசம்- காலேஜ் ஆப் அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் அண்டு போஸ்ட் ஹார்வஸ்ட் டெக்னாலஜி, சிக்கிம்- காலேஜ் ஆப் ஹோம் சயின்ஸ், மேகாலயா- காலேஜ் ஆப் போஸ்ட் கிராஜுவேட் ஸ்டடீஸ், மேகாலயா இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்- அக்ரோனமி- ஹார்டிகல்சர்- பாட்டனி அண்டு பிளான்ட் பேத்தாலஜி- பிளான்ட் பிரீடிங் அண்டு ஜெனிட்டிக்ஸ்- சாயில் சயின்ஸ் அண்டு அக்ரிகல்சுரல் கெமிஸ்ட்ரி- என்டமாலஜி- அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ்- எக்ஸ்டென்ஷன் எஜுகேஷன்- அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங்- அனிமல் சயின்சஸ்- மேதமெடிக்ஸ் அண்டு ஸ்டாடிஸ்டிக்ஸ்- ஆங்கிலம் இந்த பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு பி.எஸ்சி., அக்ரிகல்சுரல் படிப்பு உள்ளது. எம்.எஸ்சி., அக்ரிகல்சுரல் படிப்பில் கீழ்க்கண்ட பிரிவுகள் உள்ளன.- அக்ரோனமி- பிளான்ட் பேத்தாலஜி- ஹார்ட்டிகல்சர்- பிளான்ட் பிரீடிங் அண்டு ஜெனிட்டிக்ஸ்- சாயில் சயின்ஸ் அண்டு அக்ரிகல்சுரல் கெமிஸ்ட்ரி- என்டமாலஜி இந்த பல்கலைக்கழகத்தில் சேர பிளஸ் 2வில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 60 சதவீதம் மதிப்பெண் எடுத்து தேர்வு பெற்றிருக்க வேண்டும். ஆதி திராவிட மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்கள் போதுமானது. இங்கு மாணவர்களுக்கு இரண்டு ஹாஸ்டல்களும் மாணவிகளுக்கு ஒரு ஹாஸ்டலும் இயங்குகிறது. இங்குள்ள நூலகத்தில் விவசாயம் தொடர்பான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஏறத்தாழ 70க்கும் மேற்பட்ட விவசாய பத்திரிகைகளும் மாணவர்களுக்கு நூலகத்தில் கிடைக்கிறது. நுழைவுத்தேர்வின் அடிப்படையில் இந்த பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முதுகலை படிப்புக்கு இளங்கலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், நேர்காணல் அடிப்படையிலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !