உள்ளூர் செய்திகள்

தமிழகத்தின் பழமையான கல்லூரி - சிறந்த கல்வி நிறுவனங்கள் (42)

தமிழகத்தின் மிக பழமையான கல்லூரிகளில் ஒன்று பிரசிடென்சி கல்லூரி. இது 1840ம் ஆண்டு சென்னை எழும்பூரில் தொடங்கப்பட்டது. 1857ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டவுடன் இந்த கல்லூரி, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. 1870ம் ஆண்டு தற்போது அமைந்திருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. 1987ல் இது தன்னாட்சி கல்லூரியாக அறிவிக்கப்பட்டது. இந்த கல்லூரியில் உள்ள துறைகள்- தமிழ்- மலையாளம்- இந்தி- தெலுங்கு- சமஸ்கிருதம்- ஆங்கிலம்- உருது- மைக்ரோபயாலஜி- ஜியாலஜி- தாவரவியல்- இயற்பியல்- விலங்கியல்- வேதியியில்- கம்ப்யூட்டர் சயின்ஸ்- புள்ளியியல்- கணிதம்- சைக்காலஜி- பொது நிர்வாகம்- பொருளாதாரம்- வரலாறு- பொலிட்டிகல் சயின்ஸ்- கார்ப்பரேட் செகரெட்டரிஷிப்- வணிகம் இங்குள்ள படிப்புகள்பி.ஏ., படிப்பாக- பொருளாதாரம்- வரலாறு- பொலிட்டிகல் சயின்ஸ்- ஆங்கில இலக்கியம்- தமிழ் இலக்கியம்- இந்தி இலக்கியம்- மலையாள இலக்கியம்- உருது இலக்கியம் பி.எஸ்சி., படிப்பாக- கணிதம்- புள்ளியில்- இயற்பியல்- தாவரவியல்- விலங்கியல்- ஜியாலஜி- புவியியல்- சைக்காலஜி எம்.ஏ., படிப்புகளாக- வரலாறு- பொலிட்டிகல் சயின்ஸ்- பொதுநிர்வாகம்- தமிழ்- தெலுங்கு- ஆங்கிலம்- சமஸ்கிருதம் எம்.எஸ்சி., படிப்புகளாக- கணிதம்- புள்ளியியல்- இயற்பியல்- வேதியியல்- தாவரவியல்- உயிரியியல்- ஜியாலஜி- புவியியல்- சைக்காலஜி- அப்ளைடு மைக்ரோபயாலஜி எம்.பில்., படிப்புகளாக- ஆங்கிலம்- வரலாறு- பொலிட்டிகல் சயின்ஸ்- பொது நிர்வாகம்- பொருளாதாரம்- தமிழ்- தெலுங்கு- சமஸ்கிருதம்- கணிதம்- வேதியியல்- தாவரவியல்- உயிரியில்- புவியியில்- வணிகம்ஆகியவை உள்ளன. இது தவிர எம்.காம்., எம்.சி.ஏ., படிப்பும் உள்ளது. பிஎச்.டி., படிக்க- கணிதம்- புள்ளியியல்- இயற்பியல்- வேதியியல்- தாவரவியல்- உயிரியியல்- ஜியாலஜி- புவியியல்- வரலாறு- பொலிட்டிகல் சயின்ஸ்- பொது நிர்வாகம்- பொருளாதாரம்- வணிகம்- ஆங்கிலம்- தமிழ்- சமஸ்கிருதம்- தெலுங்குஆகிய துறைகளில் வசதிகள் உள்ளன. இது தவிர கார்ப்பரேட் செகரெட்டரிஷிப் பி.காம்., படிப்பாக வழங்கப்படுகிறது. இங்குள்ள நூலகத்தில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. நாட்டின் மிகப்பழைமையான நூலகங்களில் ஒன்றாக இருப்பதால் பழைய அரிய புத்தகங்கள் பல இங்கு பாதுகாக்கப்படுகின்றன. இங்குள்ள அனைத்து துறைகளுக்கும் தனியான நூலக வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் இன்டர்நெட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாணவர்களுக்காக ‘புக் ரீடர்’ வசதி உள்ளது. கல்லூரியிலேயே மாணவ, மாணவிகளுக்கு தனியான ஹாஸ்டல்கள் உள்ளன. கல்லூரி வளாகத்திலேயே ஒரு தபால் நிலையம், மருத்துவமனை, வங்கிக்ககிளை ஒன்றும் செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !