வெளிநாட்டில் படிக்க விருப்பமா...
மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது எப்படி? அதற்காக எழுத வேண்டிய தேர்வுகள் எவை? கல்வி நிலையத்தை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கவே இந்த தொடர். முதலில் முக்கியமான சில சந்தேகங்களுக்கு விடை காண்போம். யார் வெளிநாடு செல்லலாம் யார் வேண்டுமானாலும் வெளிநாடு சென்று படிக்க முடியும் என்ற சூழ்நிலை தற்போது நிலவுகிறது. அனைவரும் வெளிநாட்டு கல்வியை விரும்புகின்றனர். எனினும் ஆண்டுதோறும் வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் 2 லட்சம் பேரில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே தரமான கல்விநிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஏன் வெளிநாடு செல்ல வேண்டும் - உலகமயமாக்கல் கொள்கை வெளிநாடு செல்வதை எளிதாக்கியுள்ளது.- நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கல்வி கிடைக்கிறது.- பல்வேறு கலாசாரங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.- வெளிநாட்டில் படித்தவர்களை திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காணப்படுகிறது.- உலக அளவில் வேலைவாய்ப்பு உள்ளது, சம்பளமும் அதிகம்.- சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கிறது.- சிறப்பான எதிர்காலம் உள்ளது. எங்கு படிக்க செல்லலாம்வளர்ச்சி அடைந்த எந்த நாட்டுக்கும் செல்லலாம். குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளை தேர்வு செய்யலாம். என்ன படிக்கலாம்இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், நிர்வாகம், டிசைன்ஸ், ஐ.டி., உயிரி தொழில்நுட்பம், ஹாஸ்பிடாலிட்டி, சுற்றுலா, இதழியல், பேஷன், பிசியோதெரபி போன்ற படிப்புகளுக்கு வரவேற்பு உள்ளது. எந்த மாதங்களில் செல்ல முடியும்ஜனவரி/பிப்ரவரி, ஜூலை: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஜனவரி/பிப்ரவரி, செப்டம்பர்: அமெரிக்கா, பிரிட்டன்,கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்லலாம் செப்டம்பர்: பிரிட்டன், அயர்லாந்து தவிர்த்த பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லலாம். வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்கள் எழுத வேண்டிய தேர்வுகள் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...