உள்ளூர் செய்திகள்

உருது மொழியில் கல்வி சிறந்த கல்வி நிறுவனங்கள்-51

ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தில் அமைந்துள்ளது மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம். சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மவுலானா அபுல்கலாம் ஆசாத் பெயரில் இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மத்திய பல்கலைக்கழகம். இது 1998ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பாடங்கள் உருது மொழியில் கற்பிக்கப்படுகின்றன. இங்கு தொலைநிலைக் கல்வியும் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இந்த பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 70 ஆயிரம் தொலைநிலைக்கல்விக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் இந்த பல்கலைக்கழகத்துக்கு 9 மண்டல மையங்கள், 5 துணை மையங்கள், 118 கல்வி மையங்கள் அமைந்துள்ளன. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலும், இந்த பல்கலைக்கழகத்தின் தேர்வு மையம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்-  உருது-  ஆங்கிலம்-  அரபி-  இந்தி-  பிசினஸ் மேனேஜ்மென்ட்-  கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி-  மாஸ் கம்யூனிகேஷன்- பொலிட்டிக்கல் சயின்ஸ் அண்டு பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன்-  கல்வி மற்றும் பயிற்சி-  மொழிபெயர்ப்பு-  பெண்கல்வி-  வரலாறு-  பெர்ஷிய மொழி-  தொலைநிலைக்கல்வி இங்கு செயல்படும் சிறப்பு மையங்கள்- உருது மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரம்- பெண்கல்வி- உருது வழி கற்பிக்கும் ஆசிரியர் மேம்பாட்டு மையம்- இன்ஸ்டக்ஷனல் மீடியா- ஸ்டடி ஆப் சோஷியல் எக்ஸ்குளுஷன் அண்டு இன்குளூசிவ் பாலிசி இங்கு படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை மாணவர்களுக்கு ரூ. ஆயிரமும், எம்.பில்., மாணவர்களுக்கு ரூ.3  ஆயிரமும், பிஎச்.டி., மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்கள் வேலை பார்த்துக்கொண்டே படிக்கவும் இங்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலும், பீகாரின் தர்பங்கா நகரிலும் புதிய ஆசிரியர் பயிற்சி கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் தற்போது ஒரு ஆசிரியர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. ஐதராபாத், பெங்களூரு, தர்பங்கா நகரங்களில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழக வளாகங்களில் ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் அங்கு பாலிடெக்னிக் மையங்களும் செயல்படவுள்ளன. இங்குள்ள நூலகத்தில் உருதுமொழியில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்புகள் உள்ளன. ஏறத்தாழ 27 ஆயிரம் புத்தகங்கள் இங்குள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !