உள்ளூர் செய்திகள்

தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் - துறை அறிமுகம்

எப்படிப்பட்ட பொருளாதாரச் சூழல் இருந்தாலும் சில குறிப்பிட்ட துறையினர் மட்டும் எப்போதும் முன்னேற்றப் பாதையில் தான் பயணிக்கிறார்கள். இறுக்கமான சூழல்களில் கூட எளிதாக வெற்றிநடை போடுபவர்களை கவனித்தால் தெரியும்... அவர்களின் திறன்கள் தான் அவர்களது பயணத்தை எளிதாக்குவதை நாம் அறியலாம். தொழில்நுட்பம் சார்ந்த சில குறிப்பிட்ட பிரிவுகள் எப்போதுமே மேம்பாட்டை மட்டுமே எட்டுகின்றன. அந்தப் பிரிவுகள் எவை? டெக்னிகல் ரைட்டிங் கம்ப்யூட்டர் மென்பொருள் தொடர்புடைய அம்சங்களை சாதாரண படிப்பறிவோடு இருப்பவரும் கூட புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதுபவர்கள் டெக்னிகல் ரைட்டர்ஸ் அல்லது தொழில்நுட்ப எழுத்தாளர்கள் ஆவர். சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் பற்றிய நுண்ணறிவு, சாப்ட்வேர் துறையின் பிற அடிப்படை அம்சங்களை அறிந்திருப்பது ஆகியவற்றைப் பெற்றிருப்பவர் இதில் ஈடுபடுகின்றனர். எழுத்தார்வம், புதியவற்றைப் படைக்கும் திறன், விபரங்களை அறிவதில் ஈடுபாடு, மொழித்திறன், தகவல் பரிமாற்றத் திறன் ஆகியவையும் இதற்குத் தேவைப்படுகிறது. டெக்னிகல் ரைட்டிங் எழுத தொழில்நுட்பம் படித்தவராக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இன்ஜினியரிங் படிக்காத திறனாளர்கள் கூட இதைச் செய்ய முடியும். பொதுவாக இத்துறையில் பெரும்பாலும் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., படித்தவர்களே அதிகம் ஈடுபட்டுள்ளனர். இதில் இதழியல் படித்திருப்பவர்களும் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இத்துறைக்கான பயிற்சியானது வாரம் முழுவதுமான அல்லது வார இறுதியிலான வகுப்புகளில் தரப்படுகிறது. ஆரம்ப நிலையில் டெக்னிகல் ரைட்டராகத் தொடங்கி டீம் லீடர், டாகுமென்டேஷன் மேனேஜர், சப்ஜெக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட், டெக்னிகல் எடிட்டர் ஆகிய பதவி உயர்வுகளைப் பெற்றுப் பணியாற்றலாம். 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் மட்டுமே நாட்டில் டெக்னிகல் ரைட்டர் பணியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். ஆனால் இவர்களுக்கான தேவையோ 40 ஆயிரம் பேராக இருக்கிறது. அனிமேஷன் உயிரற்ற ஓவியங்களுக்கும், பொருட்களுக்கும் உயிரூட்டுவதாக அமையும் துறை அனிமேஷன். இதில் இணைய படைப்பாற்றல், துறை மீது தீராத தாகம், கற்பனைத் திறன், படம் மற்றும் ஓவியம் வரையும் திறன் போன்றவை தேவைப்படுகின்றன. அனிமேஷனில் பிரீ-புரடக்சன், புரடக்சன், போஸ்ட் புரடக்சன் போன்ற மூன்று நிலைகள் உள்ளன. பிரீ-புரடக்சனில் கதை உருவாக்கம், கையாள வேண்டிய உத்திகள், வண்ண அமைப்பை சோதிப்பது போன்ற பணிகள் உள்ளன. முந்தைய நிலைகளில் கற்பனையில் உருவான எண்ணங்களை உருவத்தில் கொண்டுவரும் புரடக்சன் நிலையே மிகவும் இயங்குதன்மை மற்றும் சவால்களை உள்ளடக்கிய நிலையாக உள்ளது. போஸ்ட் புரடக்சன் நிலையில், கருவாகி உருவான கதைக்கு இறுதி வடிவம் தரப்படுகிறது. அனிமேஷன் துறையில் விசுவலைசர், 2டி அனிமேட்டர், 3டி அனிமேட்டர், கிராபிக் டிசைனர், கிரியேடிவ் டைரக்டர், வீடியோ கேம் டிசைனர், ஆர்ட் டைரக்டர், கான்செப்ட் ஆர்டிஸ்ட், டெமோ ஆர்டிஸ்ட் ஆகிய பல உட்பிரிவுகள் உள்ளன. எனவே அனிமேஷன் படிப்பில் 2டி அனிமேஷன், 3டி அனிமேஷன் டிராயிங், ஆடியோ வீடியோ எபெக்ட்ஸ், வெப் கான்செப்ட்ஸ் போன்ற பகுதிகளில் பயிற்சிகள் தரப்பட வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்கள் அனிமேஷனில் பட்டப்படிப்பும் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 6 மாத அல்லது 12 மாத கால படிப்புகளையும் மேற்கொள்ளலாம். கல்வி, கட்டிடக்கலை, மருத்துவம், ஏரோஸ்பேஸ், பயோடெக்னாலஜி, கேமிங், திரைப்படம், ஆட்டோமொபைல் போன்ற பல துறைகளுடனும் இத்துறை நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. டேட்டா வேர்ஹவுசிங் இன்றைய நிலையில் தகவல்கள் என்பவை பணத்திற்கீடாக மாறிவிட்டன. ஒவ்வொரு நிறுவனமும் அதன் உள்ளேயும் வெளியேயும் தகவல்களை திறம்பட கையாளுவது முக்கியமாகிவிட்டது. தகவல்களை எலக்ட்ரானிக் வடிவத்தில் பாதுகாப்பது டேட்டாவேர்ஹவுசிங் எனப்படுகிறது. இதனால் நிறுவனங்களின் விலைமதிப்பற்ற நேரம், செலவு ஆகியவை கட்டுப்படுத் தப்படுகின்றன. ஸாப் ஒரு நிறுவனத்தின் பலதரப்பட்ட உள்ளார்ந்த செயல்பாடுகளை ஒருமுகப்படுத்தி நிறுவன செயல்திறனை அதிகரிப்பதில் ஸாப் பெரும்பங்காற்றுகிறது. உணtஞுணூணீணூடிண்ஞு கீஞுண்ணிதணூஞிஞு கடூச்ணணடிணஞ் என்னும் நவீன மேலாண்மை உத்தியின் முக்கியப் பிரிவாக செயல்படுவது ஸாப் தான். சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிர்வாகத்தில் இதன் பங்கு மிக முக்கியமானது. மிகக் குறைவான நேரத்தில் மிக துல்லியமான தகவல்களைத் தருவது தான் இதன் முக்கியப் பணி. நிதி, விற்பனை, பர்சேஸ், இன்வென்டரி, புரடக்ஷன், எச்.ஆர்., போன்றவற்றில் ஸாப் மாடூல்கள் உள்ளன. ஜாவா, ஜே2ஈஈ வியாபாரத்திற்கான மாதிரிகளை உருவாக்கி செயல்படுத்தும் செயலை நிறுவனங்கள் முக்கியமான உத்தியாகச் செய்கின்றன. இதில் ஜே2ஈஈ மிகவும் பயன்படுகிறது. எளிமை, எளிதில் புலம் பெயரும் தன்மை, நவீன அளவீட்டு முறைகள் என ஜே2ஈஈ பங்காற்றுவதால் எதிர்காலத்திற்கான முக்கிய துறையாக இது கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !