உள்ளூர் செய்திகள்

பங்குச் சந்தை - துறை அறிமுகம்

நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் தேவைப்படும நீண்டகால நிதித் தேவைக்காக பத்திரங்களை விற்கும் சந்தையை பங்குச் சந்தை என அழைக்கிறார்கள். இதில் பிரைமரி மற்றும் செகண்டரி மார்க்கெட் என்னும் 2 பிரிவுகள் உள்ளன. பிரைமரி மார்க்கெட்டில் பப்ளிக் லிமிடட் நிறுவனங்கள் மற்றும் அரசு ஏஜன்சிகளுக்கான புதிய பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இவை செகண்டரி மார்க்கெட்டில் பின்பு வணிகம் செய்யப்படுகின்றன. பத்திரங்களை விற்பவர்களையும் வாங்குபவர்களையும் ஒருங்கிணைப்பது, முதலீட்டை நிர்வகிப்பது, நிதி தொடர்புடைய ஆலோசனைகளை வழங்குவது ஆகியவை இத்துறையின் முக்கியப் பணிகளாகும். இவற்றை மேற்கொள்ள என்ன படிக்கலாம்? என்ன செய்யலாம்? இதோ சில தகவல்கள். துறைப் பணிகள்பங்குச் சந்தையில் விற்பனை மற்றும் வணிகம் செய்யும் பணியே இதில் முக்கியமானது. ஈக்விட்டிகள், பாண்டுகள், கரன்சிகள் ஆகியவற்றை வணிகம் செய்வதில் பெரிய நிறுவன முதலீட்டாளர்களோடும் வங்கிகளோடும் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. இந்த வணிகமானது கடுமையான சவால்களைக் கொண்டது. உளவியல் திறன்களும் இதில் வெற்றி பெற அவசியமாகத் தேவைப்படுகிறது. பைனான்சியல் அனலிஸ்டாக இத்துறையில் பணிபுரிபவர்கள் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பென்ஷன் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்றவற்றிற்கான நிதி மூலதன முடிவுகளை எடுப்பதில் உதவுகிறார்கள். பங்குச் சந்தையின் போக்கை கவனிப்பது, நிறுவனங்களின் செயல்பாட்டைப் பொறுத்து அவற்றின் சந்தை மதிப்பை நிர்ணயிப்பது போன்ற பணிகளை இவர்கள் செய்கிறார்கள். இதேபோல பர்சனல் பைனான்சியல் அட்வைசர், பைனான்சியல் பிளானர், பைனான்சியல் கன்சல்டன்ட் போன்றவர்கள் முதலீடு, வரிச் சட்டங்கள், இன்சூரன்ஸ் போன்றவற்றையும் குறுகிய மற்றும் நீண்ட காலத் தேவைக்கான மூலதனத் தேவை குறித்த ஆலோசனைகளை வழங்குகிறார்கள். பங்குச் சந்தையின் முக்கிய அங்கமாக இருப்பது விற்பனைப் பிரிவு தான். எனவே விற்பனைத் திறன் மற்றும் பொருட்களைப் பற்றிய முழு அறிவும் இதன் முக்கியத் தேவைகளாக உள்ளன. ஸ்டாக் புரோக்கர்களாக செயல்படுபவர்கள் ஸ்டாக்குகள், பாண்டுகள், இன்சூரன்ஸ் மற்றும் இதர முதலீடுகளை தனி நபருக்கு விற்கும் பணிகளில் ஈடுபடுகிறார்கள். இத்துறையில் பணியாற்றுபவருக்கு பல மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமரும் தேவை உள்ளது. பணியாற்றுவது ஊக்கமூட்டுவதாகவும் உடல் சோர்வை ஏற்படுத்துவாகவும் அமைகிறது. தேவையான திறமைகள்சிறப்பான மக்கள் தொடர்புத் திறன், பங்குச்சந்தை பற்றிய திறன் ஆகியவை இதற்கு அடிப்படைத் தேவைகளாகும். சூழ்நிலைக்கேற்ற செயல்படும் திறன், சந்தை அறிவு, கணக்கிடும் திறன் மற்றம் கூர்மையான உடன்பாட்டுத் திறன் ஆகியவை விற்பனையாளர்களுக்குத் தேவை. மேலும் குழு மனப்பாங்கு, தன்னம்பிக்கை, சுய ஊக்கம் போன்ற குணங்களும் இதற்கு அவசியமாகும். படிப்புகள்இத்துறையில் ஒருவர் சிறப்பாகச் செயல்பட காமர்ஸ், அக்கவுன்டன்சி, காஸ்ட் அக்கவுன்டன்சி, பொருளாதாரம், நிதி மற்றும் நிர்வாகம் தொடர்புடைய பட்ட மேற்படிப்புகளைப் படித்திருக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை. செக்யூரிடிஸ் மார்க்கெட்டிங்கில் பட்ட மேற்படிப்பு, கேபிடல் மார்க்கெட், வெல்த் மேனேஜ்மென்ட், பைனான்சியல் இன்ஜினியரிங், ரிஸ்க் மேனேஜ்மென்ட் போன்றவற்றில் ஒன்றில் எம்.பி.ஏ., ஆகிய படிப்புகளும் இதற்கு மிகவும் உதவக் கூடியவை. துறையின் முதலீட்டு வங்கிப் பணிகளுக்கு டாப் பிசினஸ் ஸ்கூல்களின் எம்.பி.ஏ., படிப்பு வலியுறுத்தப்படுகிறது. துறையின் முக்கியப் படிப்பாக கிரிஸில் சர்டிபைட் அனலிஸ்ட் புரொகிராம் என்னும் படிப்பு உள்ளது. இது 2 ஆண்டு தொடக்க நிலைப் படிப்பாகும். துறை எதிர்காலம் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாகவும் உலகமயமாக்கல் காரணமாகவும் இத்துறையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வெல்த் மேனேஜ்மென்ட் தொடர்புடைய பிரிவு இத்துறையில் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டு வருகிறது. நிதிச் சந்தையின் செயல்பாடுகள் சிக்கல்கள் நிறைந்ததாக மாறிவரும் நிலையில் இத்துறையில் சிறப்புப் படிப்புகளை படித்தவருக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அனுபவத்தைப் பொறுத்தே ஒருவர் இதில் சிறந்து விளங்க முடிகிறது. எங்கு படிக்கலாம்NMIMS University, MumbaiITM Institute of Financial Markets, Navi MumbaiIndian School of Business & Finance, Centre for Financial Planning, New Delhi National Stock Exchange of India Ltd(NSE's) Certification in Financial Markets.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !