உள்ளூர் செய்திகள்

திரிபுரா பல்கலைக்கழகம் - சிறந்த கல்வி நிறுவனங்கள் (55)

திரிபுராவின் தலைநகர் அகர்தலாவிலிருந்து பத்து கிமீ., தொலைவில் சூர்யமணிநகரில் திரிபுரா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இது ஒரு மத்திய அரசு பல்கலைக்கழகம். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ல் 1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் உள்ள துறைகள்- அரசியல்- வரலாறு- புவியியல் மற்றும் பேரிடர் மேலாண்மை- தத்துவம்- பெங்காலி- ஆங்கிலம்- சமஸ்கிருதம்- பகுப்பாய்வு மற்றும் அப்ளைடு எகனாமிக்ஸ்- வணிகம்- இயற்பியல்- வேதியியல்- கணிதவியல்- விலங்கியல்- தாவரவியல்- மனித உடலியல்-  இந்தி தொலைநிலைக்கல்வி வாயிலாக இங்கு பி.ஏ., எம்.ஏ., எம்.எட்., போன்ற படிப்புகளும் படிக்கலாம். எம்.சி.ஏ., பி.சி.ஏ., எம்.எஸ்சி., கம்ப்யூட்டர்சயின்ஸ் போன்ற படிப்புகளும் படிக்கலாம். இங்கு பல்வேறு துறைகளில் 16 முதுகலைப்படிப்புகள் உள்ளன. மொத்தத்தில் 38 பட்டப்படிப்புகள் இப்பல்கலைக்கழகத்தில் உள்ளன. இருபத்துநான்கு பொது மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. திரிபுரா மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் இந்த பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்குள்ள நூலகத்தில் 53 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. வெளியூர் மாணவர்கள் தங்கிப்படிப்பதற்கு வசதியாக விடுதிகள் உள்ளன. ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி தங்கும் விடுதிகள் உள்ளன. இவ்விடுதியில் 100 ஆண்களும், 40 பெண்களும் தங்கிப்படிக்கலாம். மாணவர்கள் விளையாட்டில் தங்களது திறமையை வளர்த்துக்கொள்வதற்கு வசதியாக 4 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழக வளாகத்தில் ஸ்டேட் பேங்கின் கிளை மற்றும் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் தபால் அலுவலகமும் உள்ளது. 69 சதுரமீட்டர் பரப்பளவில் சுகாதார மையம் செயல்படுகிறது. இது இங்கு படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் போன்ற அனைவருக்கும் சுகாதார வசதிகளை வழங்குகிறது. மாணவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கென ‘ஜிம்’ வசதியும் உள்ளது. காந்திய சிந்தனை படிப்புக்கென தனி மையம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !