உள்ளூர் செய்திகள்

சிறந்த படிப்பை தேர்வு செய்வது எப்படி

இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங்   பலரும் இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங் படிப்பை தொழிற்சாலைகள் தொடங் குவது தொடர்பான படிப் பாகவே கருதுகின்றனர். உண்மையில் இப்படிப்பு உற்பத்தியை மேம்படுத்துதலுடன் தொடர்புடையது. இண்டஸ்டிரியல் இன்ஜினியர்கள் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் குறித்து திட்டமிடுகின்றனர். தொழிற் கூடங்களின் அமைப்பை திட்டமிடுதல், உபகரணங்களைத் தேர்ந்தெடுத்தல், தரக்கட்டுப் பாட்டை நிர்ணயித்தல், அசெம்ப்ளி லைன்களை ஒருங்கிணைத்தல், தொழிலாளர்களின் வேலைகளை திட்டமிடல், உற்பத்தியை மேம்படுத்துவதற்கு ஆலோசனை வழங்குதல், தரக் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை, எளிய முறையில் மூலப்பொருட்களை பயன்படுத்துதல், அதிக அளவில் உற்பத்தியை பெருக் குதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். நிர்வாகத்துக்கும், தொழிற்சாலைகளின் உற்பத்தி மையங்களுக்கும் இடையே முக்கியத் தொடர்பாக இண்டஸ்டிரியல் இன்ஜினியர்கள் பணியாற்றுகின்றனர். மிகப்பெரிய உற்பத்தி மையங்களில் இத்துறையை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் இண்டஸ்டிரியல் இன்ஜினியர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐ.டி.,) கம்ப்யூட்டர், தகவல்தொடர்பு, இன்டர்நெட், தொழில்நுட்ப நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றி கற்றுத்தருவதே இன்பர்மேஷன் டெக்னாலஜி. அச்சு வடிவில் உள்ள ஆடியோ அல்லது வீடியோ தகவல்களை சேகரிப்பது, பகுப் பாய்வு செய்வது, பாதுகாப்பது, செயல்படுத்துவது, தானியங்கி முறையில் தகவல்களை மீட்டெடுப்பது, கையாள்வது போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் வழிமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு வழங்குகிறது. தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் தயாரிப்புகளில் ஐ.டி., நிபுணர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். ஐ.டி., துறையின் கீழ் நெட்வொர்க்குகளை ஏற்படுத்துதல், நெட்வொர்க் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு, வெப் பேஜ்களை வடிவமைத்தல், ஈ மெயில் வசதிகள், மல்டிமீடியாவை மேம்படுத்துதல் ஆகியவை இடம்பெறுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் இத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இத்துறையை தேர்ந்தெடுப்பவர்கள் ஐ.டி., நிறுவனங்களில் டேட்டா அட்மினிஷ்டிரேட்டர், சிஸ்டம் அனலைஸ்ட், சிஸ்டம் புரோகிராமர், சாப்ட்வேர் டெவலப்பர், இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜர், எலக்ட்ரானிக் டேட்டா பிராசஸிங் மேனேஜர், சாப்ட்வேர் கன்ஸல் டன்ட், சாப்ட்வேர் இன்ஜினியர், வெப் டிசைனர், வெப் மாஸ்டர், வெப் மார்க்கட்டிங் எக்ஸிகூட்டிவ், இ-காமர்ஸ்/இன்போமீடியரி அட்மினிஸ்ட்ரேட்டர், கால் சென்டர் மேனேஜர், மல்டி மீடியா டிசைனர், நெட்வொர்க்கிங் வல்லுனர், சிப் டிசைனர் மற்றும் மார்க்கெட்டிங் அட்வைசர் என பல பதவிகளில் பணியாற்றலாம். இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் துல்லியமான அளவீடுகளுடன் தொடர்புடையது இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங். தொழிற்துறைக்கு தேவையான முக்கிய படிப்பாக இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்பு உள்ளது. இப்படிப்பில் அடாப்டிவ் கன்ட்ரோல் சிஸ்டம், அனலைட்டிகல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், பயோமெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கேலிபரேஷன் அண்டு எலக்ட்ரானிக் மெஷர்மென்ட், கம்ப்யூட்டர் டிசைன் ஆப் கன்ட்ரோல் சிஸ்டம், கம்ப்யூட்டர் ஆர்கானிசேஷன், டிஜிட்டல் அண்டு ஆப்டிமல் கன்ட்ரோல் சிஸ்டம், டிஜிட்டல் சிக்னல் பிராசசிங், எலக்ட்ரானிக் அண்டு லேசர் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எம்பட்டட் ரியல் டைம் சிஸ்டம், இண்டஸ்ட்ரியல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், லீனியர் அண்டு டிஜிட்டல் ஐசி அப்ளிகேஷன், மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம், மைக்ரோ பிராசஸர்ஸ் அண்டு இன்டர்பேசிங், நியூரல் நெட்வொர்க் அண்டு பஸ்சி லாஜிக், பி.சி., பேஸ்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், பவர் பிளான்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், ப்ரைம் மூவர்ஸ் அண்டு மெக்கானிக்கல் காம்போனென்ட்ஸ், பிரின்சிபில் ஆப் கம்யூனிகேசன்ஸ், ப்ராசஸ் கன்ட்ரோல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், பல்ஸ் அண்டு டிஜிட்டல் சர்க்யூட், ரோபோடிக்ஸ் அண்டு ஆட்டோமேஷன், சென்சார் அண்டு சிக்னல் கண்டிஷனிங், சிக்னல்கள் அண்டு சிஸ்டம்கள், சுவிட்சிங் தியரி அண்டு லாஜிக் டிசைன், டெலிமெட்ரி அண்டு டெலிகன்ட்ரோல், ட்ரான்ஸ்டியூசர்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், விர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பாடங்கள் உள்ளன. பெட்ரோலியம் மற்றும் உரம் உற்பத்தி தொழிற்சாலைகள் போன்றவற்றில் பல்வேறு வகையான உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், சுரங்கத் தொழிற்சாலைகள், உரத்தொழிற்சாலைகள், காகிதத் தொழிற் சாலைகள், இரும்பு மற்றும் எஃகுத் தொழிற்சாலைகள், எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள், கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றில் இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. லெதர் டெக்னாலஜி இது ஒரு பி.டெக்., படிப்பு. இதில் மிகக் குறைவான இடங்களே <உள்ளன. இதனால் லெதர் டெக்னாலஜி முடித்த மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. எனவே லெதர் டெக்னாலஜி உதவி கொண்டு வடிவமைத்தல் மற்றும் உற்பத்திக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்களுக்கு நாள்தோறும் தோல் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது. பல்வேறு வகையான காலணிகள், பைகள், பெல்ட்கள், பர்ஸ்கள், உறைகள், பொம்மைகள், துணிவகைகள், விளையாட்டுப் பொருட்கள், இசை கருவிகள் தயாரிக்க லெதர் டெக்னாலஜி படிப்பு பயன்படுகிறது. தோல் பதனிடும் சாலைகள், தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் பணியாற்றும் மனப்பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொண்டால் இத்துறையில் சாதிக்கலாம். இப்படிப்பில் ஸ்கின் புரோட்டின்ஸ், டேனிங் பிராசஸ், ஸ்போர்ட்ஸ் குட்ஸ் லெதர்,பினிசிங், ஆர்கானிக் டேனேஜஸ், கெமிக்கல் அனாலிசிஸ், பாக்டீரியாலஜி, பிராக்டீஸ் ஆப் லெதர் மேனுபக்சர், கட்டிங், சைஸிங் அண்டு டிசைனிங், டைஸ் அண்டு டையிங், லெதர் ஆக்சிலரிஸ், வேஸ்ட் மேனேஜ்மென்ட் அண்டு என்விரான்மென்ட், அனாடமி அண்டு ஹுமேன் புட்கேர், பிளான்ட் டிசைன், பிராசஸ் எகனாமிக்ஸ் அண்டு இன்டஸ்ட்ரியல் மேனேஜ்மென்ட் மற்றும் குவாலிட்டி கன்ட்ரோல் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன. காலணிகள், துணிவகைகள், விளையாட்டு உபகரணங்கள், மற்ற பிற லெதர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பரந்து விரிந்த இன்ஜினியரிங் துறைகளில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கும் ஒன்று. ஆராய்ச்சி, மேம்பாடு, வடிவமைத்தல், உற்பத்தி, டெஸ்டிங் ஆப் டூல்ஸ் உட்பட பல்வேறு பிரிவுகளில் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் பணியாற்றுகின்றனர். இன்டர்னல் கம்பஷன் இன்ஜின், ஸ்டீம் அண்டு கேஸ் டர்பைன், தெர்மல் பவர் பிளான்ட், மெஷின் டூல்ஸ், மெட்டீரியல் ஹேன்ட்லிங் சிஸ்டம், லிப்ட், எஸ்கலேட்டர், ரோபோ தொடர்பான தொழிற்சாலைகள் போன்றவற்றில் இத்துறையை சேர்ந்தவர்கள் பணியாற்ற முடியும். நவீன தொழிற்சாலைகளில் ‘கம்ப்யூட்டர் எய்டட் டிசைன்’ (கேட்) மற்றும் ‘கம்ப்யூட்டர் எய்டட் மேனுபக்சரிங்’ (கேம்) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு தொழிற்சாலைகளில் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் பணியாற்றலாம். தொழிற்சாலைகளைப் பொறுத்து இவர்களுடைய பணியும் மாறுபடுகிறது. பல்வேறு நிறுவனங்களில் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் புரடக்ஷன் மேனேஜர்களாக பணிபுரிகின்றனர். - பி.எஸ். வாரியார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !