வெளிநாடு சென்று படிக்கலாம் (12)
வெளிநாட்டில் முதுகலைப் படிப்பில் சேர விரும்புபவர்கள் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்- மார்க் ஷீட், டிகிரி, டிப்ளமோ- ஸ்டேட்மென்ட் ஆப் பர்பஸ்- ‘ரிசர்ச் பிரபோசலி’ன் நகல்(ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும்)- படித்த கல்வி நிறுவனத்திலிருந்து மூன்று பரிந்துரை கடிதங்கள்- அதிகாரப்பூர்வமான டோபெல், ஐ.இ.எல்.டி.எஸ்., ஜிமேட்/ ஜி.ஆர்.இ., மதிப்பென் சான்றிதழ். ஸ்டேட்மென்ட் ஆப் பர்பஸ்:விண்ணப்பத்துடன் கொடுக்கப்படும் ‘ஸ்டேட்மென்ட் ஆப் பர்பஸ்’ (எஸ்.ஓ.பி.,) எனும் குறிப்பில் மாணவரின் கல்வி, பிற திறன்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். தகுதி தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் குறைந்தாலும், எஸ்.ஓ.பி., திருப்திகரமாக இருந்தால் மாணவருக்கு, பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. பரிந்துரை கடிதங்கள்பரிந்துரை கடிதம், மாணவர்களின் தனிநபர் மதிப்பை பல்கலைக் கழகங்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது. சான்றிதழ் வழங்குபவர் மாணவர்கள் தொடர்பான தகவல்களை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவராக இருக்கவேண்டும். அவரிடம் சான்றிதழ் தேவைப்படும் நோக்கத்தை தெரிவித்து, மற்ற சான்றிதழ்களை ஆராய்ந்தபின் வழங்குமாறு தெரிவிக்கவேண்டும். சில ஆசிரியர்கள் மாணவர்களையே பரிந்துரை கடிதங்களை தயார் செய்யச்சொல்லி கையெழுத்திடுகின்றனர். இது வருந்தத்தக்கது. அனுமதி விதிமுறைகள்பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் அனுமதி வழங்கும் முன் கீழ்க்கண்டவற்றை சோதிக்கின்றன:- கல்வித்திறன்- தகுதி தேர்வு மதிப்பெண்கள்(டோபல்/ ஐ.இ.எல்.டி.எஸ்.,/ஜி.ஆர்.இ.,/ ஜிமேட்/சாட்) மாணவர்கள் படிக்க விரும்பும் நாடு, படிப்பு இவற்றின் அடிப்படையில் , அவர்கள் மேலே குறிப்பிட்ட தகுதி தேர்வுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வுகளை எழுதவேண்டும். அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களின் தகுதி, படிப்பு திறமையை சோதிக்க பலவிதமான தகுதி தேர்வுகளை அமெரிக்கா நடத்துகிறது. - ஸ்டேட்மென்ட் ஆப் பர்பஸ்- பரிந்துரை கடிதங்கள்- மாணவரின் நிதி நிலைமை (அமெரிக்காவில் இதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது) வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், முதலில் தொடர்புகொள்ளும் மாணவர்களுக்கே, முன்னுரிமை அளிக்கின்றன. எனவே முன்கூட்டியே விண்ணப்பிப்பது அவசியம்.