உள்ளூர் செய்திகள்

மக்கள் தொகை கல்விக்கு ஐ.ஐ.பி.எஸ்., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (61)

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாப்புலேஷன் ஸ்டடீஸ் (ஐ.ஐ.பி.எஸ்.,) மும்பையில் அமைந்துள்ளது. 1956ல் ஐ.நா., சபை, மத்திய அரசு மற்றும் தொராப்ஜி டாடா அறக்கட்டளை இணைந்து மக்கள்தொகை கல்வியில் சிறப்பு படிப்புகளை வழங்கும் வகையில் இந்த கல்வி நிறுவனத்தை உருவாக்கின. தொடக்கத்தில் ‘டெமாக்ரட்டிக் டிரைனிங் அண்டு ரிசர்ச் சென்டர்’ என பெயர்சூட்டப்பட்டது. 1985 ஆக., 15ல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது. இதன் நிர்வாகம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சுகாதாரம், பயிற்சி, ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் ஐ.ஐ.பி.எஸ்., மற்ற அரசு பல்கலைக்கழகங்கள், பிற தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கிவருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஆசியா, ஆப்ரிக்கா, வடஅமெரிக்கா கண்டங்களில் உள்ள 42 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு கல்வி பயின்றுள்ளனர். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மக்கள்தொகை மற்றும் சுகாதார துறைகளில் ஐ.ஐ.பி.எஸ்.,சில் பயின்றவர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இதில் உள்ள படிப்புகள் -டிப்ளமோ இன் பாப்புலேஷன் ஸ்டடீஸ்இதற்கான காலம் 1 ஆண்டு. காலியிடங்கள் மொத்தம் 30. படிக்க ஆகும் கட்டணம் 13 ஆயிரம்.தகுதி: ஏதாவது ஒரு சமூக அறிவியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். -மாஸ்டர் ஆப் பாப்புலேஷன் ஸ்டடீஸ்எழுத்துத்தேர்வு, நேர்காணல் முறையில் இப்படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். மொத்த காலியிடங்கள் 30. இப்படிப்பின் காலம் 1 ஆண்டு. இதில் எம்.பில்., படிப்பும் இங்குள்ளது -டாக்டர் ஆப் பிலாசபி இன் பாப்புலேஷன் ஸ்டடீஸ்ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பாப்புலேஷன் ஸ்டடீஸ் படிப்பில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்களுடன் எம்.பில்., அல்லது முதுநிலை படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இப்படிப்பில் வெளிநாட்டு மாணவர்களும் சேரலாம். இவை தவிர 2 ஆண்டு எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., பாப்புலேஷன் ஸ்டடீஸ் பட்டப்படிப்புகளும் இங்குள்ளன. இங்குள்ள நூலகத்தில் மொத்தம் 78 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை குறித்து துல்லியமான புள்ளிவிவரங்களை இங்கு அறிந்து கொள்ள முடியும். மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி ஹாஸ்டல்கள் உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள், விருந்தினர்களுக்கு ‘ஏசி’ வசதியுடன் கூடிய அறைகளும் உள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !