உள்ளூர் செய்திகள்

டெக்ஸ்டைல் துறையில் வாய்ப்புகள்

தற்போதுள்ள இளைஞர்கள் உடைகள் தரமானதாகவும், ஸ்டைலாகவும் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். நமது அன்றாட வாழ்வில் உடைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. காட்டன் மட்டுமல்லாது சில்க், செல்லுலோஸ் பைபர், கம்பளி, நைலான்களிலும், பாலியஸ்டர், ரேயான், சணல், ப்ரெய்டு போன்ற செயற்கை இழைகளினாலும் உடைகள் தயாரிக்கப்படுகின்றன. டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிப்பு ஸ்பின்னிங், வீவிங், டையிங் போன்ற மூன்று பெரிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டெக்ஸ்டைல் துறை உற்பத்தி, விற்பனை, ஆராய்ச்சி என்ற மூன்று பிரிவாக உள்ளது. மார்கெட்டிங் மற்றும் பேஷன் போன்றவையும் முக்கியமானவை. நவீன துணிவகைகள் கம்ப்யூட்டர் உதவியுடன் வடிவமைக்கப்படுகின்றன. இந்த பி.டெக்., டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிப்பில் அப்ளைடு மெக்கானிக்ஸ், என்விரான்மென்டல் பொல்யூஷன், பியூயல்ஸ், பாலிமர்ஸ், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ், தெர்மோடைனமிக்ஸ், டை அண்டு டையிங், பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி, மெஷரிங் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், எலக்ட்ரோகெமிஸ்ட்ரி, அடிட்டிவ்ஸ், எக்ஸ்ட்ரூஷன், யான் ஸ்பின்னிங், வீவிங், சைசிங், குவாலிட்டி கன்ட்ரோல், ஐ.டி., அப்ளிகேஷன் போன்ற பாடங்கள் உள்ளன. தேசிய அளவில் கூட இப்படிப்பில் மிகக் குறைவாக இடங்களே உள்ளதால் டெக்ஸ்டைல் நிறுவனங்களில் போதுமான வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. டெக்ஸ்டைல் டெக்னாலஜிஸ்ட், டெக்ஸ்டைல் கெமிஸ்ட், குவாலிட்டி கன்ட்ரோல் எக்ஸ்பர்ட் போன்ற பதவிகளில் பணியாற்றலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !