உள்ளூர் செய்திகள்

விவசாயத்துடன் இன்ஜினியரிங், மருத்துவ கல்வி - சிறந்த கல்வி நிறுவனங்கள் (64)

உ.பி.,யின் அலகாபாத் மாவட்டத்தில் ‘அலகாபாத் அக்ரிகல்சுரல் இன்ஸ்டிடியூட்’ அமைந்துள்ளது. இது 1910ம் ஆண்டு டாக்டர் ஹிக்கின்பாட்டம் என்பவரால் தொடங்கப்பட்டது. கிராமப்புற பகுதியில் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கத்தில் இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. மத்திய அரசு 2000ம் ஆண்டில் இதை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவித்தது. உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் ‘நாக்’ குழு இதற்கு பி., பிளஸ் பிளஸ் கிரேடு வழங்கியுள்ளது. உ.பி., மாநிலத்திலேயே நான்கு பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்த கிரேடு பெற்றுள்ளன. இங்கு விவசாயம் தொடர்பான படிப்பு மட்டுமின்றி பல்வேறு பிரிவுகளில் கலை, அறிவியில், மருத்துவம், இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 34 இளநிலைப் படிப்புகளும், ஏழு இளநிலை டிப்ளமோ படிப்புகளும், 58 முதுநிலைப் படிப்புகளும், ஆறு முதுநிலை டிப்ளமோ படிப்புகளும், இரண்டு சான்றிதழ் படிப்புகளும், பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சிப்படிப்புகளும் உள்ளன. இது தவிர தொலைதூர கல்வியாகவும் பல்வேறு படிப்புகள் இந்த பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்றன. உ.பி.,யில் விவசாயம் தொடர்பான பல்வேறு சர்வதேச கருத்தரங்கங்களின் மையமாகவும் இந்த பல்கலை., செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்- விவசாயம்- பாரஸ்ட்ரி அண்டு என்விரான்மென்ட்- பேசிக் சயின்ஸ்- பாரன்சிக் சயின்ஸ்- கோஸ்பல் அண்டு புளோ தியோலாட்டிகல் இன்ஸ்டிடியூட்- கல்வி- ஹியூமானிட்டிஸ்,சோஷியல் சயின்ஸ், ஆர்ட் அண்டு கல்சர் - ஹெல்த் அண்டு மெடிக்கல் சயின்ஸ்- அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி- இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி- பயோடெக்னாலஜி அண்டு அலைடு சயின்ஸ்- புட் அண்டு டெய்ரி டெக்னாலஜி- பிசினஸ் ஸ்டடீஸ்- வெட்ரினரி சயின்ஸ் அண்டு அனிமல் ஹஸ்பண்டரி- பிலிம் அண்டு மாஸ் கம்யூனிகேசன் தொலைதூர கல்வியில் உள்ள துறைகள்- இன்பர்மேஷன் டெக்னாலஜி- ஹியூமானிட்டீஸ்- மேனேஜ்மென்ட்படிப்பை நிறைவு செய்த பின் வேலைவாய்ப்பை பெறும் வகையில் மாணவர்களுக்கு இந்த பல்கலைக்கழகம் உதவி வருகிறது. பலருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத்தந்துள்ளது. விவசாய படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களில் பலரை பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி பண்ணையிலேயே பார்ம் மேனேஜர், அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட், அக்ரிகல்சர் அட்மினிஸ்டிரேட்டர் போன்ற பொறுப்புகளில் நியமித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !