உள்ளூர் செய்திகள்

வளரும் வெப் டெக்னாலஜி

இன்றைய உலகில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் குறித்து அறியாதவர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவது கடினம். ஒவ்வொரு நாளும் புதுப்புது சாப்ட்வேர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. எந்த துறை மாணவராக இருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை பற்றி அறிந்து கொள்வது அவசியம். பரோடாவில் உள்ள மகாராஷ்டிரா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு வெப்டெக்னாலஜி சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படிப்பிற்கான காலம் 16 வாரங்கள். இதில் சேர மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் அடிப்படை திறன்களை பெற்றிருக்க வேண்டும். இதற்கான கட்டணம் 7,700 ரூபாய். இப்படிப்பை முடித்தவர்கள் வருடத்திற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை தொடக்க நிலையிலேயே சம்பளமாக பெறலாம். இப்படிப்பில் எச்.டி.எம்.எல்., மட்டுமின்றி, வெப் சர்வீஸ் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு தேவையான லினக்ஸ், அபாச்சே, மை எஸ்.கியூ.எல்., போன்ற சாப்ட்வேர்களும் கற்றுத்தரப்படுகின்றன. இப்படிப்பில் மொத்தம் 80 மணிநேரம் கற்பித்தலும், 60 மணி நேரம் செயல்முறைப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இணையதளங்கள் அனைத்தும் பி.எச்.பி., அல்லது மை எஸ்.க்யூ.எல்., போன்ற சாப்ட்வேர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருவதால் இத்துறையில் வல்லுனர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெப்டெக்னாலஜியில் சிறந்த வல்லுனர்களை உருவாக்குவதே இந்த குறைந்த கால படிப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை வழங்குவதில் வெப் டெக்னாலஜி படிப்பு முன்னிலை வகிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !