ஐ.சி.டி., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (70)
தி இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (ஐ.சி.டி.,) மும்பையில் அமைந்துள்ளது. கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இந்தியாவின் முதன்மையான கல்விநிறுவனமாக இது விளங்குகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கெமிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் டெக்னாலஜி, பார்மசி போன்ற பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 76 ஆண்டுகளாக கெமிக்கல் தொழில்நுட்பப் படிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. ஐ.சி.டி., 1936ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம்நாள் மும்பை பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. மகாராஷ்டிர அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் இதற்கு 1994ம் ஆண்டு தன்னாட்சி அதிகாரம் வழங்கின. 2008ம் ஆண்டு செப்டம்பர் 12 ம் நாள் இது நிகர்நிலைப்பல்கலைக்கழகமாக உருவானது. இங்குள்ள துறைகள் -கெமிக்கல் இன்ஜினியரிங்-பொது இன்ஜினியரிங்-அப்ளைடு சயின்ஸ்-கெமிக்கல் டெக்னாலஜி இந்த பல்கலைக்கழகம் வழங்கும் ஆராய்ச்சி படிப்புகள்-கெமிக்கல் இன்ஜினியரிங்-மெக்கானிக்கல் இன்ஜினியரிங் -சிவில் இன்ஜினியரிங்-எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்-இயற்பியல்-கணிதம்-டெக்னாலஜி-சட்டம் இங்கு வழங்கப்படும் மருத்துவப்படிப்புகள்-எம்.பி.பி.எஸ்.,-பி.டி.எஸ்.,-பி.எஸ்சி., நர்சிங்-எம்.பார்ம்., -பி.பார்ம்., -பி.பி.டி., இங்கு வழங்கப்படும் சட்டப்படிப்புகள்-பி.ஏ.,எல்.எல்.பி.,-எல்.எல்.பி.,-எம்.பில்.,-பி.பி.ஏ.,எல்.எல்.பி.,ஹானர்ஸ்-டிப்ளமோ இன் பிசினஸ் லா-பி.எஸ்சி., எல்.எல்.பி.,-டிப்ளமோ இன் லேபர் லா-எல்.எல்.எம்., இங்குள்ள முதுகலைப்படிப்புகள்-எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி-எம்.எஸ்சி., எஜூகேசன்-சோஷியல் ஒர்க்-மைக்ரோபயாலஜி-கணிதம்-எம்.ஏ., சோஷியாலஜி-எம்.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி-பொருளாதாரம்-விவசாயம் இதன் வளாகம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள நூலகத்தில் 38ஆயிரத்து 200 புத்தகங்கள் உள்ளன. மாணவர்கள் தங்கிப்படிக்கும் வகையில் ஐந்து ஹாஸ்டல்கள் உள்ளன. புதிதாக சேரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7 கோடி ரூபாய் செலவில் ஹாஸ்டல் கட்டப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி தங்கும் விடுதிகள் உள்ளன.