உள்ளூர் செய்திகள்

சி.ஐ.பி.இ.டி., சிறந்த கல்வி நிறுவனங்கள்-73

பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான தொழிற்துறைக்கு சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி(சி.ஐ.பி.இ.டி.,) இந்தியாவின் முதன்மையாக கல்வி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.இது மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறையின்கீழ் செயல்படும் தன்னாட்சி கல்வி நிறுவனம் ஆகும். சி.ஐ.பி.இ.டி., யின் முதல் வளாகம் 1968ம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டது. தற்போது அகமதாபாத், அமிர்தசரஸ், அவுரங்காபாத், போபால், புவனேஸ்வர், சென்னை, கௌஹாத்தி, ஹைதராபாத், ஹஜிபூர், ஹால்டியா, ஜெய்ப்பூர், இம்பால், லக்னோ, மைசூர் மற்றும் பானிபட் போன்ற நகரங்களிலும் இதன் வளாகங்கள் அமைந்துள்ளன. பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசியாவிலும் தலைசிறந்த கல்வி நிறுவனமாக சி.ஐ.பி.இ.டி., திகழ்கிறது. இங்குள்ள பல்வேறு படிப்புகளுக்கு ‘ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன்’(ஜெ.இ.இ.,) தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இங்குள்ள முதுகலை தொழில்நுட்ப படிப்புகள்-பிளாஸ்டிக் இன்ஜினியரிங்-பிளாஸ்டிக் டெக்னாலஜி-நானோ டெக்னாலஜி-சி.ஏ.டி.,/சி.ஏ.எம்.,/சி.ஏ.இ., இக்கல்லூரியில் உள்ள குறுகிய கால படிப்புகள்-இன்ஜெக்சன் மோல்டிங் பிராசஸ்-இன்ஜெக்சன் மோல்டிங் அண்டு புளோ மோல்டிங்-பிளாஸ்டிக் மெட்டீரியல் ஐடன்டிபிகேசன்-பாலிமர் அலாய்ஸ் அண்டு பிளெண்ட்ஸ் அண்டு காம்போசைட்ஸ் -காம்பவுண்டிங், மனுபக்சரிங்  அண்டு டெஸ்டிங் -டெஸ்டிங் அண்டு குவாலிட்டி கன்ட்ரோல் ஆப் பிளாஸ்டிக் மெட்டீரியல்ஸ் -மாடர்ன் மோல்டு மனுபக்சரிங் சொலூசன்-இன்ஜக்சன் மோல்டு டிசைன்-பிளாஸ்டிக் புராடக்ட்ஸ் அண்டு மோல்டு டிசைன் -அட்வான்ஸ்டு இன்ஜக்சன் மோல்டு டிசைன் இங்குள்ள டிப்ளமோ படிப்புகள்-பிளாஸ்டிக்ஸ் மோல்டு டெக்னாலஜி-பிளாஸ்டிக் டெக்னாலஜி இங்குள்ள போஸ்ட் டிப்ளமோ படிப்புகள்-பிளாஸ்டிக்ஸ் மோல்டு டெக்னாலஜி-பிளாஸ்டிக் டெக்னாலஜி மாணவர்கள் இக்கல்லூரியில் டிப்ளமோ அல்லது போஸ்ட் டிப்ளமோ படிப்பில் சேர பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ படிப்பு 3 ஆண்டுகள். போஸ்ட் டிப்ளமோ படிப்பு 4 ஆண்டுகள். வேதியியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இங்கு போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் பிராசசிங் அண்டு டெஸ்டிங் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதற்கான காலம் 1 1/2 ஆண்டுகள். இங்குள்ள நூலகத்தில் 33 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. நூலகம் முழுவதும் கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டு இருப்பதால் டிஜிட்டல் நூலகம் மூலம் மாணவர்கள் வேண்டிய தகவல்களைப் பெறலாம். இந்தியாவின் தலைசிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காம்பஸ் தேர்வின் மூலம் இங்கு பயிலும் மாணவர்களை தேர்வு செய்து வேலை வாய்ப்புகளை அளிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !