கைநிறைய சம்பாதிக்கக்கூடிய நிதி பகுப்பாய்வு துறை
பொருளாதார தாராளமய உலகத்தில் பயிற்சிபெற்ற நிதி பகுப்பாய்வு வல்லுனர்களுக்கான தேவை அதிகளவில் உள்ளது. எனவே இதற்கான படிப்பிற்கு(CFA) உலகம் முழுவதும் அதிக மதிப்பும், மரியாதையும் உள்ளது. CFA படிப்பை முடித்த வங்கி பணியாளர்கள், இத்துறைக்கான பலவித தேர்வுகளில், சில பாடங்களை எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அதேசமயம், புதிதாக CFA முடித்து வருபவர்கள், நிதித் துறையில், பயிற்சி எக்சிகியூடிவ் பணியில் முதல் வாய்ப்பை பெறுகிறார்கள். இத்துறையில் ஓரளவு அனுபவம் கிடைத்த பிறகு, உயர்நிலை எக்சிகியூடிவ் பணி வாய்ப்புகளை பெறலாம். தகுதிகள்: அங்கீகாரம் பெற்ற பல்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேவேளையில், எம்.பி.ஏ, சி.ஏ., சி.எஸ்., சி.டபிள்யூ.ஏ. மற்றும் மேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள், இப்படிப்பிற்கான நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள். அதேசமயம், அமெரிக்காவிலுள்ள CFA கல்வி நிறுவன தேர்வை எழுத, அதுதொடர்பான பணிகளில் 4 வருட அனுபவம் இருக்க வேண்டும். ஐ.சி.எப்.ஏ.ஐ. இரட்டை பட்டப் படிப்பில் சேர, ஒரு இளநிலைப் பட்டம் அவசியம். மேலும், சி.ஏ., சி.எஸ்., சி.டபிள்யூ.ஏ, மற்றும் நிதித்துறையில் எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு, விரைவுப்படுத்தலுக்கான ஒரு வருட படிப்பு வழங்கப்படுகிறது. தனிப்பட்ட பண்புகள்: அக்கவுண்டன்சி பின்புலம் இருக்க வேண்டும், உள்ளுணர்வு திறன் இருக்க வேண்டும், நடப்பு நிகழ்வுகளின் மீது ஆர்வமும், கணக்கியல் திறனும் இருக்க வேண்டும், அறிவுத்துறையில் முதிர்ச்சியும், நிதி விவகாரங்களை விரும்புபவராகவும் இருக்க வேண்டும், கடினமாக உழைக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும், சிறந்த பகுப்பாய்வு திறனைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் நிதி முதலீட்டில் ஆர்வம் இருக்க வேண்டும். சம்பளம்: புதிதாக CFA முடித்தவர்கள், தோராயமாக, வருடத்திற்கு ரூ.4 லட்சம் வரை பெறுகிறார்கள். அனுபவம் உள்ளவர்கள் இதைவிட அதிகம் பெறுகிறார்கள். வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், குத்தகைக்கு விடும் நிறுவனங்கள், ரயில்வே மற்றும் RBI நிதி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. பொதுவாகவே, இத்துறையில் பணிபுரிபவர், விரும்பக்கூடிய அளவில் ஊதியம் பெறுகிறார். CFA படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்: Shaheed Sukhdev college of Business studies - New Delhi ICFAI University - Dehradun. ICFAI University - Gangtok, Sikkim.