பெருகிவரும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொழில்
நவீன வாழ்வில், பிளாஸ்டிக் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக ஆகிவிட்டது. பிளாஸ்டிக் தொழில்துறை என்ற பலகையில்தான், நவீன தொழில்நுட்பம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் அளவிற்கு நிலைமை இன்று மாறியுள்ளது. ரப்பருடன் கலந்து, பிளாஸ்டிக், தொழில்துறையில் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக், மின்சார தடுப்பாகவும், வெப்ப தடுப்பாகவும், நீர் தடுப்பாகவும், வீடு மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. மேலும், தள மறைப்பு, கூரை மறைப்பு போன்றவை தயாரிக்கவும், பிசுபிசுப்பு, தண்ணீர் மற்றும் காலநிலை தடுப்பு பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக் உபயோகமானது, காலப்போக்கில் அதிகரித்து வருகிறது. ரப்பர் என்பது ஒரு இயற்கை பொருள். அதேசமயம், சிந்தெடிக் ரப்பரின் பயன்பாடு அதிகம். பல்வேறு பயன்பாடுகளுக்காக, பலவிதமான ரப்பர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. டிரக் வண்டிகளின் சக்கரங்கள், மின்சார வயர்கள் தயாரிப்பு, குழாய்கள் தயாரிப்பு போன்ற பலவித பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் ரப்பர்கள் தயாரிக்கப்படுகின்றன. காலநிலை பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் அரிப்பு தடுப்புகளுக்கும் ரப்பர் பயன்படுகிறது. ஒரு பொருளின் தயாரிப்பை நிறைவுசெய்வதில் ரப்பர் முக்கிய பங்காற்றுகிறது. இன்றைய நிலையில், இயற்கை ரப்பரை மிஞ்சும் அளவிற்கு சிந்தெடிக் ரப்பரானது பலவிதங்களிலும் பயன்படுகிறது. பணியின் தன்மைகள்: ஒரு பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிபுணர், தயாரிப்பு, மூலப் பொருட்களில் இருந்து பலவித தயாரிப்புகளை செய்தல் மற்றும் புதிய மூலப் பொருட்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார். தேவைப்படும் பிளாஸ்டிக் மூலப் பொருட்களை பொறுத்து, விதவிதமான அம்சங்கள் ஒவ்வொன்றிலும் கலக்கப்படுகின்றன. பிளாஸ்டிக்கின் தன்மைகளை தேவைப்படும் விதத்தில் மாற்ற, பலவித ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. வண்ணங்களை சேர்த்தல் மற்றும் பிளாஸ்டிக்கை தேவைப்படும் வடிவத்தில் வார்த்தெடுக்கும்போது, பலவித பயன்பாட்டு பொருட்கள் கிடைக்கின்றன. பிளாஸ்டிக் வார்ப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன், பிளாஸ்டிக்/பாலிமர் பொறியாளர்கள் தங்களது உற்பத்தி பணியை செய்கிறார்கள். உலோகங்கள், மரம் மற்றும் கண்ணாடி போன்றவைகளுக்கு ஒரு நல்ல மாற்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. ப்ராசஸ் பொறியாளர் என்பவர், மூலப்பொருள் மற்றும் வடிவமைப்பில் சிறந்த தரம் பேணப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ரப்பர் தொழில்நுட்ப வல்லுநர் என்பவர், ரப்பர் பொருள் தயாரிப்பை மேற்பார்வையிடுகிறார். மேலும், சிந்தெடிக் ரப்பர் மூலமாக புதிய பயன்பாடுகளையும் உருவாக்குகிறார். சந்தையின் தன்மைகளை அறிந்து, ஒரு நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்கிறார். இத்துறையில் நுழைவது எப்படி: ஒருவர் அறிவியல் பிரிவில் பள்ளி படிப்பை முடித்த பிறகு, பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் பி.இ. அல்லது பி.டெக். சேரலாம். இதில் உயர்கல்வி வாய்ப்புகளும் உள்ளன. தனிப்பட்ட பண்புகள் மற்றும் திறமைகள்: பிளாஸ்டிக் பொறியாளர்களும், ரப்பர் தொழில்நுட்ப வல்லுனர்களும், பணியாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். எனவே இது விஷயத்தில் அவர்கள் திறமையாக செயல்பட வேண்டும். சிறந்த யூகிக்கும் திறனும், தொழில்நுட்ப திறனும் இருக்க வேண்டும். மேலும், பிரச்சினைகளை தீர்க்கும் திறனும், ஒரு விஷயத்தை வெளிப்படுத்தும் திறனும், வேகமாக புரிந்துகொள்ளும் திறனும், படைப்பு திறனும், தொழில்நுட்ப வரைபடம் மற்றும் கணிப்பொறி திறன்களும் இத்தொழிலுக்கு அவசியம். வேலை வாய்ப்புகள்: பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பிளாஸ்டிக் செயல்பாடு யூனிட்டுகள் பல அளவில் சிறிதாக இருந்தாலும், எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றன. தயாரிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கமிஷன், ஆயில் இந்தியா லெபாரட்டரி, பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினீயரிங், இந்திய பெட்ரோலிய நிறுவனம், பல மாநிலங்களின் பாலிமர் கழகங்கள், இந்திய பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு, பெட்ரோபைல்ஸ் கூட்டுறவு நிறுமம் மற்றும் பிற அமைப்புகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. மேலும், பல தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்களின் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதால், பல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.