உள்ளூர் செய்திகள்

சேவையே பிரதானம்!

எந்த பணியை செய்தாலும், முழு ஈடுபாட்டுடனும், சேவை மனப்பான்மையுடனும் மேற்கொள்ள வேண்டும் என்ற எங்களது கொள்கைக்கு ஏற்ப, ஏழை, எளியவர்களுக்கும் தரமான சிகிச்சையை சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்குகிறோம். ஒருங்கிணைந்த சிகிச்சைநாட்டிலேயே முதல்முறையாக, 'இன்டெக்ரேட்டர்டு கிளினிக்' அறிமுகப்படுத்தி உள்ளோம். நோயாளிகளுக்கு எந்தவித அலைச்சலும் இன்றி, அனைத்து மருத்துவர்களும் இடம்பெற்ற இத்தகைய கிளினிக்குகளில் பரிசோதனை மற்றும் சிகிச்சையை ஒருங்கே பெறுகின்றனர். நோயாளிகள் அறிந்த மற்றும் அறியாத நோய்களையும் கண்டறிந்து தகுந்த சிகிச்சை வழங்குகிறோம். இவற்றிற்காக நவீன இயந்திரங்கள், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளோம். இலவச கல்விஎங்கள் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 50 மாணவ, மாணவிகளுக்கு முழுவதுமாக இலவச கல்வி வழங்குகிறோம். இவற்றின் வாயிலாக, இந்திய முப்படை, காவல், தீயணைப்பு போன்ற சீருடை பணியில் இருந்து எதிர்பாராத விதமாக இறந்தவர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் பயன் பெறுகின்றனர். இத்தருணத்தில், இன்றைய இளைஞர்களுக்கு முக்கிய ஆலோசனை வழங்குவேண்டுமானால், பெற்றோரை எக்காரணத்திற்காகவும் கைவிடக்கூடாது என்பதும், செல்வத்தை தேடி செல்வதில் கவனம் செலுத்தக்கூடாது என்பதுமே. நம் கடமையிலும், பணியிலும் உரிய கவனமும், ஆர்வமும் செலுத்தினால் போதும்; செல்வம் தானாக நம்மை தேடிவரும். பல்வேறு துறை சார்ந்த படிப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அறிந்து, அவற்றிற்கு ஏற்ப விருப்பமான படிப்பை தேர்வு செய்ய, பள்ளி படிப்பை நிறைவு செய்த மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அதன்படி, மருத்துவம், பல் மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், ஆர்க்கிடெக்சர் உட்பட எங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இரண்டுவார கால நேரடி பயிற்சி வழங்குகிறோம்.மேலும், ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, மலேசியா, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் எங்கள் கல்வி நிறுவனங்களில் குறுகிய கால பயிற்சி பெறுகின்றனர். தரவரிசையில் முதலிடம்சர்வதேச தரவரிசையில் முதல் நூறு இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற வேண்டும் என்று நமது பாரத பிரதமர் வெகு காலமாக வலியுறுத்தி வருகிறார். க்யு.எஸ்., சர்வதேச தரவரிசையில் இடம்பெற்று, ஒரு தனியார் கல்வி நிறுவனமாக எங்களால் பிரதமரது விருப்பத்தை நிறைவேற்ற முடிந்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தேசிய அளவில் வெளியிடப்படும் என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையில் முதல் இடத்தை சவீதா பல் மருத்துவக் கல்லூரி பெற்றுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.-வீரய்யன், வேந்தர், சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்டு டெக்னிக்கல் சயின்சஸ், சென்னை.chancellorpa@saveetha.com044-66726677


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !