உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நடைமுறை

தமிழக பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை ஆண்டுதோறும்,'தமிழ்நாடு இன்ஜினியரிங் அட்மிஷன் - டி.என்.இ.ஏ.,'வாயிலாக நடைபெறுகிறது. மாநிலத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.ஆன்லைன் பதிவுமுதலில், மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்று உட்பட தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.ஆவணம் சரிபார்ப்புகவுன்சிலிங்கில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவ, மாணவிகள் தங்களது சான்றிதழ்களை டி.எப்.சி., மையங்களில் சரிபார்ப்பதற்காக சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவேற்றிய ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன.தர வரிசை வெளியீடுமாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு நடைபெறும். பிரிவுகளுக்கு ஏற்ப கல்லூரிகளில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.கவுன்சிலிங்கிற்கு அழைப்புதரவரிசையின் அடிப்படையில், மாணவர்கள் சுற்றுவாரியாக அழைக்கப்படுவர்.சுற்று 1 - முதல் தரவரிசை மாணவர்கள்சுற்று 2 - முதல் வரிசைக்கு கீழ் உள்ள மாணவர்கள்சுற்று 3 - கடைசி தரவரிசை மாணவர்கள்ஒவ்வொரு சுற்றுக்கும் தனி தேதி, நேரம் வழங்கப்படும்.சாய்ஸ் பில்லிங்இது மிகவும் முக்கியமான கட்டம். இங்கே மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பிரிவுகளை தங்களுடைய விருப்பப்படி வரிசைப்படுத்த வேண்டும். மாணவர்களின் விருப்பங்களின் எண்ணிக்கைக்கு வரம்பில்லை; எத்தனை விருப்பங்களை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.மாணவர்கள் தங்கள் தரவரிசையை கருத்தில் கொண்டு விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும். தரமான கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது சிறந்தது. கடந்த 5 ஆண்டு கல்லூரிகளின் கட்-ஆப் விபரங்கள் https://www.tneaonline.org/ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.கவுன்சிலிங்கில் மாணவர்கள் தங்களது தரவரிசையை உணர்ந்து, சிந்தித்து, தகவல்களுடன் கூடிய விருப்பத் தேர்வுகளை செய்யும் பொழுதே சிறந்த முடிவுகளை பெற முடியும். 'சாய்ஸ் பில்லிங்' என்பது மிக முக்கியமான கட்டம் என்பதைக் கருத்தில் கொண்டு அதில் கவனத்துடன் ஈடுபட வேண்டும்.இறுதி ஒதுக்கீடுஅனைத்து மாணவர்களின் தேர்வுகள் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும். கல்லூரி சேர்க்கைமாணவர் ஒரு இடத்தை உறுதிப்படுத்திய பிறகு, அக்கல்லூரிக்கு நேரில் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சேர்க்கை பெறலாம். விபரங்களுக்கு: https://www.tneaonline.org/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !