உள்ளூர் செய்திகள்

யுனெஸ்கோ எழுத்தறிவு விருதுகள்

எழுத்தறிவை ஊக்குவிக்கும் வகையில் உலகின் எந்தப்பகுதியில் மேற்கொள்ளப்படும் முயற்சிக்கும் யுனெஸ்கோ சர்வதேச எழுத்தறிவு விருதுகள் வழங்கப்படுகின்றன. முக்கியத்துவம்உலக மக்களின் எழுத்தறிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கருப்பொருள் 'பரஸ்பர புரிதல் மற்றும் அமைதிக்கான பன்மொழி கல்வி'.யுனெஸ்கோ கிங் செஜாங் எழுத்தறிவு பரிசு: தாய்மொழி அடிப்படையிலான எழுத்தறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கொரிய குடியரசால் கிங் செஜாங் எழுத்தறிவு பரிசு வழங்கப்படுகிறது.யுனெஸ்கோ கன்பூசியஸ் எழுத்தறிவு பரிசு: செயல்முறைபாட்டு கல்வி, தொழில்நுட்ப சூழல்களை மேம்படுத்துதல், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் மற்றும் பள்ளி செல்லாத இளைஞர்களின் கல்வியறிவை ஊக்குவிக்கும் பொருட்டு சீன அரசால் இந்த பரிசு வழங்கப்படுகிறது.தகுதிகள்: எழுத்தறிவை ஊக்குவிக்கும் தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை, ஐ.என்.சி.சி.யு., எனும் யுனெஸ்கோவிற்கான நேஷனல் கமிஷன் பார் கோஆப்ரேஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி, மது பாலா சோனி, துணை செயலாளர், மத்திய கல்வி அமைச்சகம், அறை எண் 203-A 'C' விங், டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலை, சாஸ்திரி பவன், புதுடில்லி - 110001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 5, 2024தொடர்பு எண்: 011-2338 4442இ-மெயில்: inc.edu@nic.inவிபரங்களுக்கு: http://en.unesco.org/themes/literacy/prizes


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !