கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தினமலர் பற்றி நச்சென கவிதை எழுதி கொடுத்து அசத்தல்
பெங்களூரு: கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு வந்த, ஓய்வு பெற்ற ஆசிரியை, 'தினமலர்' நாளிதழ் பற்றி நச்சென கவிதை எழுதி கொடுத்து அசத்தினார். தன் தாய் மொழி தெலுங்கு என்றாலும், தமிழுக்கு தான் முன்னுரிமை என்று, அவர் கூறியது மெய்சிலிர்க்க வைத்தது.பெங்களூரு ஜாலஹள்ளி மல்லசந்திராவில் வசிக்கும், ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை கவுரி, 77, சிவாஜிநகர் தினமலர் அலுவலகத்தில் உள்ள கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு, நேற்று வருகை தந்தார். இங்குள்ள ஆன்மிக புத்தகங்களை ஆர்வமாக பார்த்தார். நுாலகத்திற்கு வந்தது பற்றி, 'தினமலர்' நாளிதழ் பற்றி நச்சென கவிதை எழுதி கொடுத்தார்.டிவி, மொபைல் பின், அவர் கூறியதாவது: என் தாய்மொழி தெலுங்கு என்றாலும், நான் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அதனால், தமிழுக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். தமிழ் வழியில் படித்தேன். தினமும் தமிழ் புத்தகங்களை தவறாமல் படிப்பேன். கடந்த நான்கு ஆண்டுகளாக, பெங்களூரில் வசிக்கிறேன். 'டிவி,' மொபைல் போன் பார்த்து நேரத்தை வீணடிக்க மாட்டேன்.புத்தகம் மட்டுமே படிப்பேன். அது போல, தினமலர் நாளிதழை படிக்க எடுத்து விட்டால், அனைத்து பக்கங்களையும் படித்து முடிக்காமல், கீழே வைக்க மாட்டேன். என் சிறு வயதில் நாளிதழ் படித்து முடித்தால் தான், பெற்றோர் வீட்டில் காபி கொடுப்பர். 'அறுசுவை' பக்கம் சூப்பராக உள்ளது. அதை பார்த்து வீட்டில் ஏதாவது புதிதாக செய்கிறேன்.மாசி மகம் என்பதால், சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலுக்கு வந்தேன். தினமலர் அலுவலகம் இங்கு இருப்பதால் எப்படியாவது, நுாலகத்திற்கு சென்றே ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன். நாளிதழில் வந்த நுாலகம் தொடர்பான புகைப்படத்தை கட்டிங் செய்து, அதில் உள்ள முகவரியை வைத்து இங்கு வந்தேன்.முகவரி கேட்டு யாரையும் தொந்தரவு செய்வது எனக்கு பிடிக்காது. இங்கு வந்து புத்தகங்களை படித்தது ஆத்ம திருப்தி அளிக்கிறது. நுாலகம் அருமையாக உள்ளது. வயதாகி விட்டதால் நீண்ட நேரம், இங்கு அமர்ந்து படிக்க முடியவில்லை என்று வருத்தம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.வரலாறு புத்தகம் பெங்களூரு ஒயிட்பீல்டில் வசிக்கும் வக்கீல் பிரபாகரன், 64 என்பவரும், நுாலகத்திற்கு வருகை தந்தார். குமரி முதல் வேங்கடம் வரை புத்தகத்தின் 6 பாகங்களை, நுாலகத்திற்கு நன்கொடையாக வழங்கி மகிழ்ச்சி அடைந்தார். வரலாறு தொடர்பான புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்து புரட்டி படித்தார்.பின், அவர் கூறியதாவது:கடந்த, 30 ஆண்டுகளாக நான் தினமலர் வாசகர். என்னால் முடிந்த சிறிய நன்கொடையாக சில புத்தகங்களை, நுாலகத்திற்கு கொடுத்து உள்ளேன். ஒயிட்பீல்டில் இருந்து மெட்ரோ ரயிலில் வந்ததால், நிறைய புத்தகங்களை எடுத்து வர முடியவில்லை. அடுத்த முறை காரில் வரும் போது, இன்னும் நிறைய புத்தகங்களை எடுத்து வருவதுடன், என் மனைவியையும் கண்டிப்பாக அழைத்து வருகிறேன். தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.நுாலகம் ரொம்ப அருமையாக உள்ளது. எனக்கு தெரிந்து பெங்களூரு தமிழ்ச்சங்கத்தை தவிர வேறு எங்கும், இவ்வளவு தமிழ் புத்தகங்கள் இருப்பதை பார்த்தது இல்லை. மெம்பர்ஷிப் ஆரம்பித்தால் துாரத்தில் இருந்து வருவோருக்கு நிச்சயம் பலன் அளிக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கும் இடத்தில், அலுவலகம் இருந்தாலும் எந்த சலசலப்பும் இன்றி, அமைதியாக புத்தகங்களை படிக்க, இந்த நுாலகம் ஏற்ற இடமாக உள்ளது. நுாலகம் மேலும் வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் கூறினார்.ஆசிரியை கவுரி எழுதி கொடுத்த கவிதைதினமும் மலர்வது தாமரை …தினமும் படிப்பது தினமலர் …சூரியனை பார்த்து மலர்வது தாமரை …தினமலரை பார்த்ததும் மகிழ்வது மக்கள் …தினமலரை கையில் பிடித்தால்பொழுது போவது தெரியாதே…தினமலரே எங்கும் வீசட்டும் உன் வாசம்...எங்கும் பரவட்டும் உன் புகழ்...!