உள்ளூர் செய்திகள்

முன்னாள் படைவீரர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் - என்ஐஇஎல்ஐடி மற்றும் டிஜிஆர் இணைந்து நடத்திய முக்கிய நிகழ்வு

புதுடில்லி: முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முறை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) மற்றும் மறுபணியமர்த்தல் இயக்குநரகம் (டிஜிஆர்) இணைந்து வேலைவாய்ப்பு முகாம் 2025 என்ற நிகழ்வை நேற்று புதுடில்லியில் நடத்தியது.இந்த முகாமில் 14 நிறுவனங்கள் பங்கேற்று, 250-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளுக்காக முன்னாள் படைவீரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்தன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது.நிகழ்வில் என்ஐஇஎல்ஐடி திட்ட இயக்குநர் டாக்டர் அலோக் திரிபாதி வரவேற்புரை ஆற்றி, பயிற்சியும் வேலைவாய்ப்பும் இடையிலான பிணைப்பை வலியுறுத்தினார்.தலைமை விருந்தினராக என்ஐஇஎல்ஐடி நிர்வாக இயக்குநர் திரு சுபான்ஷு திவாரி உரையாற்றி, சீருடையில் இருந்து புதிய தொழில்முறை அடையாளத்திற்கு மாற்றம் ஒரு சவாலான கட்டம். இதற்குத் தேவையான பயிற்சி மற்றும் வாய்ப்புகளை வழங்குவது தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும், என்றார்.இந்த முகாம், முன்னாள் படைவீரர்களின் புதிய வாழ்வுப் பாதைக்கு உறுதியான ஆதரவாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்