சட்டத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ளது உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு
புதுச்சேரி : அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ளது என, உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசினார்.புதுச்சேரியில் நடந்த அரசியலமைப்பு சாசன ஏற்பின் 75வது ஆண்டு விழாவில் அவர், பேசியதாவது:மனித சமுதாயம் சீர்படுத்தப்பட வேண்டும். மக்களுடைய வாழ்க்கை தரத்தை சிறப்பாக மாற்ற வேண்டும். மக்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தங்களுடைய உரிமைகளை உணர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக ஒரு சித்தாந்தத்தை கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே உலகம் கண்டு இருக்கிறது.இதில், தமிழகத்துடைய பங்களிப்பாக அறம் என்கிற சித்தாந்தம் ஆக சிறந்த இடத்திலேயே எழுந்து நின்று உலகத்திற்கே ஒரு உன்னதமான இடத்தை உருவாக்கி காட்டியுள்ளது.சட்ட வரைவுகள் இதுதான் என அறிமுகப்படுத்தப்பட்ட பின்னால், அவற்றை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எடுத்து சொல்வதற்காக நீதிமன்ற அமைப்புகள் உருவாகின.2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் எந்த தன்மைமிக்க வாழ்க்கையை வாழ்ந்து உள்ளனர் என்பதை சங்க காலத்து பாடல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.அமைச்சர்களுக்குஅறிவுரைசொல்வது இந்த கால கட்டத்தில் சாத்தியமா என்பது தெரியவில்லை. ஆனால், சங்க காலத்தில் புலவர்கள் மன்னர்களுக்கு முன் அறத்தை எப்படி நீ கடைப்பிடிக்க வேண்டும்.சட்டத்தை நீதி எப்படி எடுத்து செல்ல வேண்டும். மக்களிடையே உன்னுடைய அரசாட்சியை எந்தவித பாகுபாடும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.1946களில் துவங்கி, 3 ஆண்டுகள்பல்வேறு சட்ட சிக்கல்களை விவாதித்த பிறகே முழு வடிவம் இந்த அரசியல்சாசன சட்டத்திற்குவருகிறது.நவம்பர் 26ம் தேதி 1949ல் வெளியிடப்படுகிறது. ஜனவரி 26ம் தேதி 1950ல் இருந்து அது நடைமுறைப்படுத்தப்படுகிறது.75 ஆண்டுகள் கடந்து உள்ள அரசியலமைப்புசட்டத்தை கொண்டாடுகிறோம் என்று சொன்னால், அதனை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ளது. இவ்வாறு கூறினார்.