உள்ளூர் செய்திகள்

ஹேர் கட் பண்ண சொன்ன பள்ளி தலைமை ஆசிரியர் கொலை: ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பிளஸ் 2 மாணவர்கள் இருவரை ஹேர் கட் பண்ண சொன்ன தலைமையாசிரியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் உள்ள கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு பள்ளியின் தலைமையாசிரியராக ஜக்பீர் சிங் 50, உள்ளார்.இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் இருவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்டையில் சம்பவம் நடந்த பள்ளிக்கு போலீசார் சென்றனர்.இந்த சம்பவம் குறித்து ஹன்சி எஸ்.பி., அமித் யஷ்வர்தன் கூறியதாவது:பள்ளியில் விசாரணை நடத்தியதில்,பள்ளி தலைமையாசிரியர் மாணவர்களை தலைமுடி வெட்டவும், சரியாக உடை அணியவும், பள்ளியின் விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதை அந்த மாணவர்களிடம் பல முறை எச்சரித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியது, அந்த மாணவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மடிப்பு கத்தியை எடுத்து அவரை பலமுறை குத்தினர். இந்நிலையில் அவர் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்து ரத்தம் வெளியேறிய நிலையில் உயரிழந்தார்.பள்ளி வளாகத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஸ்கேன் செய்து, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விரிவான விசாரணைக்குப் பிறகுதான் கொலைக்கான சரியான சூழ்நிலைகள் தெரியவரும். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மைனரான அந்த மாணவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.இவ்வாறு அமித் யஷ்வர்தன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்