உள்ளூர் செய்திகள்

புத்தக திருவிழாவில் மனதை கவரும் கவிதை, புகைப்பட ஓவிய கண்காட்சி மாணவர் வருகையை அதிகரிக்கலாமே

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் இயற்கை புகைப்படங்கள் மற்றும் ஓவிய கண்காட்சி, பாரம்பரிய உணவுகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.ராமநாதபுரம் - மதுரை ரோட்டிலுள்ள ராஜா பள்ளி மைதானத்தில் பிப்.,2 வரை புத்தக திருவிழா நடக்கிறது. இங்கு 100 அரங்குகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.தினமும் தமிழ் ஆர்வலர்கள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கருத்துரைகள் வழங்கப்படுகின்றன.பாரம்பரிய உணவுகள், கோளரங்கம், மின்னுாலகம், ஓவியம், தொல்லியல், மூலிகை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை இலவசமாக பார்வையிடலாம். தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் காலை நேரத்தில் அதிகமாக வருகின்றனர். அதே சமயம் மதியத்திற்கு மேல் அவ்வளாக மாணவர்கள் வருகையின்றி அரங்குகளில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.எனவே, காலை நேரத்தில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் குவிந்து விடுவதால் சரியாக புத்தகங்களை பார்வையிட முடிவது இல்லை.எனவே, ஒரு பகுதி மாணவர்களை மதியத்திற்கு மேல் அழைத்து வருவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என அரங்கத்தினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்