உள்ளூர் செய்திகள்

நாளை திண்டுக்கல்லில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி உயர்கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் நிபுணர்கள்

பிளஸ் 2 எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி, உறுதியான எதிர்காலத்திற்கான முழுமையான வழிகாட்டுதல் அளிக்கும், அனுபவம் வாய்ந்த கல்வி நிபுணர்களால் ஏராளமான ஆலோசனைகள் வழங்கும் இந்நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.இந்தாண்டும் பிரமாண்டமாய், புத்தம் புதிய சிந்தனைகளோடும், 'ஏ.ஐ.,' யுக கனவுகளை நனவாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு வழிகாட்ட நாளை துவங்கும் இந்நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்களின் கண்காட்சியுடன், கருத்தரங்குகளும் காலை 10:00 மணி முதல் மாலை 06:30 மணி வரை நடக்கின்றன.கருத்தரங்குகளில் இரண்டு நாட்களும் பல்வேறு தலைப்புகளில் துறைசார் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், கல்வி ஆலோசனை நிறுவனங்கள், பள்ளிகளின் அரங்குகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம். கல்லுாரிகளின் விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரையிலான நடைமுறைகள், கல்விக் கட்டணம், கல்லுாரியில் உள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஒரே கூரையின் கீழ் அனைத்து ஆலோசனையும் பெறலாம்.இந்நிகழ்ச்சிக்கு பவர்டு பை: கோவை ஸ்ரீராம கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யாபீடம். இணைந்து வழங்குபவர்கள்: மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,), சேலம் நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. ஆடியோ பார்ட்னர் இன்போ பஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்