இயற்கை விவசாயத்தில் பள்ளி மாணவர்கள் சமக்ர சிக் ஷா யோஜனா திட்ட சாதனை
சிவகங்கை: விவசாயிகளுடன் ஒரு நாள் வாழ்ந்து பார் என்ற கருத்திற்கேற்ப சிவகங்கை அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண் பிரிவு மாணவர்கள் நடவு முதல் அறுவடை வரை இயற்கை விவசாய பணிகளில் ஈடுபட்டு, மத்திய அரசின் இத்திட்டத்தை சாதனையாக கொண்டு செல்கின்றனர்.மத்திய அரசின் சமக்ர சிக் ஷா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு பள்ளி படிப்புடன் வேளாண்மை படிப்பை முடித்து விடாமல், உள்ளீடு (இன்டர்னல்) பயிற்சியாக மாதத்திற்கு 10 நாட்கள் விவசாய நிலங்களுக்கு சென்று, விவசாயிகளை போல் செயல்முறை பயிற்சியில் ஈடுபட்டு, இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.மாணவர்களுக்கு உள்ளீடு மதிப்பெண் 10 வரை வழங்கப்படும். மாதத்திற்கு 10 நாட்கள் விவசாய நிலங்களில் நாற்று பாவுதல், நாற்று நடுதல், உரமிடல், அறுவடை போன்ற அனைத்து பணிகளையும் இயற்கை உரங்களின் உதவியுடன் செய்து வருகின்றனர்.இது தவிர விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் விவசாயி வளர்க்கும் கால்நடை மூலம் கிடைக்கும் சாணம், கோமியம்,தயிர், மோர், நெய், வெல்லம், நாட்டு வாழைப்பழம் ஆகியவற்றை சேகரித்து 25 நாட்கள் பதப்படுத்தி, அவற்றை பயிர்களுக்கு பூச்சி விரட்டி மருந்தாக தயாரித்து தெளிக்கின்றனர். இதற்காக நவீன தெளிப்பான் கருவி பயன்படுத்துகின்றனர்.இது தவிர, பஞ்ச காவ்யம், அமிர்த கரைசல் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். நெல் பயிரிடுதல் மட்டுமின்றி காய்கறிகள் விளைவிப்பதிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக சிவகங்கை மாவட்டம் தமறாக்கி, இடையமேலுார் அரசு மேல்நிலை பள்ளி வேளாண் பிரிவு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 50 பேர் அப்பகுதி இயற்கை விவசாயிகளை தொடர்பு கொண்டு, அவர்களது நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இக்களப்பணி மாதத்திற்கு 10 நாட்கள் ஆண்டுக்கு 80 நாட்கள் வீதம் 2 ஆண்டுக்கு 160 நாட்கள்வரை களப்பணியில் மாணவர்கள் ஈடுபடுவர் என வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.வேளாண்மை மாணவர்கள் உற்சாகம்களப்பயிற்சியில் ஈடுபடும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மத்திய அரசின் சமக்ர சிக் ஷா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு இம்மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் 10 நாட்களுக்கு ரூ.2,000 வரை மதிப்பூதியமும், பாராட்டு சான்றும் வழங்குவதால், அரசு பள்ளி மாணவர்கள்உற்சாகம் அடைந்துஉள்ளனர்.மாணவர்கள் விவசாயம்செய்யும் நில உரிமையாளரை கவுரவிக்கும் விதத்தில் ஒரு விவசாயிக்கு ரூ.1000 மதிப்பூதியம், பொன்னாடை போர்த்தி பள்ளிகளில் மாணவர்கள்முன் கவுரவிக்கப்படுகிறது. மாணவர்களை புத்தக படிப்போடு நிறுத்தாமல், களப்பயிற்சியில் ஈடுபடுத்தி விவசாயத்தின் முக்கியத்துவத்தை, மத்திய அரசின் இத்திட்டம் அறிய செய்துள்ளது.மாணவர்களின் இக்கள பயிற்சிக்கு இடையமேலுார் தலைமை ஆசிரியர் அச்சுதன், வேளாண் ஆசிரியர்கள்ஆனந்தன், ராபின், தமறாக்கி வேளாண் ஆசிரியர்கள் கோபிநாத், சரவண பிரியன் ஒருங்கிணைத்து செல்கின்றனர்.