உள்ளூர் செய்திகள்

தாய்மொழி மூலம் அடிப்படைக் கல்வி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ஜி.ரவி வலியுறுத்தல்

சின்னாளபட்டி: அடிப்படைக் கல்வியை தாய் மொழி மூலம் கற்பது அவசியம் என அழகப்பா பல்கலை துணைவேந்தர் ஜி.ரவி பேசினார்.காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை சார்பில் ஆசிரியர் கல்வியின் தரம் குறித்து பன்னாட்டு கருத்தரங்கு துவக்க விழா நடந்தது துணைவேந்தர் பஞ்சநாதன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், இளைய தலைமுறைக்கு தரமான கல்வி கொடுப்பதன் மூலம் எதிர்காலத்திற்கான சிறந்த தலைமையை உருவாக்க முடியும். சிறந்த ஆசிரியரை எந்த ஒரு செயற்கை நுண்ணறிவாலும் பெற முடியாது. குருகுல கல்வி முறை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும், நவீன கல்வி முறை ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தர் ஜி.ரவி பேசுகையில், ஆசிரியர்கள் பாடத்திட்டங்களின் அடிப்படை அறிவை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மாணவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் பண்பு ஆசிரியர்களுக்கு அவசியம். கல்வியாளர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். தாய்மொழி மூலமாகவே அடிப்படை கல்வியை கற்க வேண்டும். ஆய்வு மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தரமான ஆய்வுகளை முன்னெடுக்க முடியும் என்றார். கல்வியியல் துறை தலைவர் ஸ்ரீதேவி, உதவி பேராசிரியர் பக்தவத்சலபெருமாள் முன்னிலை வகித்தனர். இணை பேராசிரியர் தேவகி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்